அப்போ பிரச்சினை விஜய்தான்! இதுக்கு என்ன சொல்லப் போறீங்க? வெளியான ‘உல்ஃப்’ பட பாடலால் ரசிகர்கள் ஆவேசம்!

by Rohini |
prabhu
X

prabhu

பிரபுதேவா நடிப்பில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் படம் உல்ஃப். இந்தப் படத்தில் முதல் சிங்கிள் இன்று வெளியாகி இருக்கின்றது. அந்தப் பாடல் வரிகளை எழுதியவர் பிரபுதேவா. அந்தப் பாடலைப் பாடியவர் விஜய் சேதுபதி. படத்திற்கு இசையமைத்தவர் அம்ரிஷ்.

சிங்கலு மால்ட் என தொடங்கும் அந்த பாடல் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டான்ஸ் என்றால் பிரபுதேவாவுக்கு சொல்லவா வேண்டும். மிக அற்புதமாக இந்த பாடலில் நடனம் ஆடி இருக்கிறார்.

இதையும் படிங்க : நீ ஜெயிச்சிட்ட மாறா!.. விக்ரம் பட வசூலை 6 நாளில் தாண்டிய ஜெயிலர்!.. கெத்து காட்டும் ரஜினி…

பாடல் முழுவதும் கையில் பாட்டில் உடனே பிரபுதேவா நடனம் ஆடியிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் அவருடன் ஆடும் துணை நடிகைகளும் தன்னுடைய வயிற்றின் நடுப்பகுதியில் பாட்டிலை சொருவியும் நடனம் ஆடி இருக்கின்றனர்.

அந்தப் பாடலில் ஒரு வரி இடம்பெற்றுள்ளது. அதாவது ‘ரெண்டு பெக்க போட்டாக்க ஜென்டில்மேன் , கொஞ்சம் எக்ஸ்ட்ரா கட்டிங் போட்டா சூப்பர் மேன்’. இதைக் கேட்டதும் விஜய் ரசிகர்கள் பெரும் ஆவேசம் அடைந்துள்ளனர். தண்ணி போட்டால் தான் ஜென்டில்மேன் சூப்பர் மேன் என சொல்லும் இந்தப் பாடலில் எந்த சர்ச்சையும் கிளம்பவில்லை. ஆனால் லியோ படத்தில் நான் ரெடி நீ ரெடியா என்ற பாடலுக்கு அந்த அளவுக்கு சர்ச்சையை கிளப்பினார் ராஜேஷ்வரி பிரியா.

இதையும் படிங்க : எல்லா ஏரியாலயும் நாங்க கில்லி!.. ஆந்திராவில் பல கோடிகளை வசூலித்த டாப் தமிழ் படங்கள்!..

இப்ப என்ன சொல்ல போறாங்க. அப்போ பிரச்சனை பாடலில் இல்லை.விஜய் மேல் தான் என மிகுந்த கோபத்தில் தங்களுடைய ஆதங்கத்தை கமெண்ட்கள் மூலமாக இணையத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள். அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே அந்த ராஜேஸ்வரி பிரியா இப்படியெல்லாம் செய்தார் என்றும் பர்ஷனலாக விஜயை மக்கள் மத்தியில் கெட்டப்பெயரை வாங்கிக் கொடுக்கவே செய்தார் என்றும் கூறுகிறார்கள்.

Next Story