திரையுலகில் எம்.ஜி.ஆர் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் இருவருக்கும் பொருத்தமான ஒரு குணம் உண்டு. அது எல்லோருக்கும் உதவுவது. தன்னிடம் உதவி கேட்டு யாரேனும் வந்தால் அள்ளி கொடுப்பது இவர்களின் பழக்கம். இதில், என்.எஸ். கிருஷ்ணன் எம்.ஜி.ஆருக்கும் முன்னோடி.
சம்பாதித்த பணத்தில் பெரும்பாலான தொகையை மற்றவர்களுக்கே கெடுத்தவர் என்.எஸ்.கே. அதனால்தான் அவரின் மறைவுக்கு பின் அவரின் சொந்த மகனே படிப்புக்கு செலவில்லாமல் எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டு சென்றதாக கூட செய்தி வெளிவந்தது. நாடக நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல வேலைகளை செய்தவர் என்.எஸ்.கே. அதனால், அதில் சம்பாதிக்கும் பணத்தை தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு கொடுத்துவிடுவது அவரின் வழக்கம்.
ஒருமுறை ஒரு கர்ப்பிணி பெண் அவரிடம் உதவி கேட்டார். என்.எஸ்கே அவருக்கு நூறு ரூபாயை எடுத்து கொடுத்துள்ளார். அந்த காலத்தில் அது பெரிய தொகை. அந்த பெண்மணி அவருக்கு நன்றி சொல்லிவிட்டு சிறிது தூரம் சென்றதும் அவரை அழைத்த என்.எஸ்.கே மீண்டும் ஒரு நூறு ரூபாயை எடுத்து கொடுத்துள்ளார். தனக்கு ஏன் இவர் மீண்டும் பணம் கொடுக்கிறார்? என புரியாமல் அந்த பெண் நிற்க என்.எஸ்.கே சிரித்துக்கொண்டே ‘முதலில் படம் கொடுத்தது உன் மீது இரக்கப்பட்டு.. மறுபடியும் கொடுத்தது உன் நடிப்பை பாராட்டி.. தயவு செய்து வயிற்றில் வைத்திருக்கும் துணியை எடுத்து கீழே போடும்மா’ என சொல்லியிருக்கிறார்.
இதேபோன்ற சம்பவம் எம்.ஜி.ஆருக்கும் நடந்துள்ளது. ஒருமுறை ஒரு பெண் தான் கார்ப்பிணி என சொல்லி உதவி கேட்க, அவருக்கு தேவையான உதவிகளை எம்.ஜி.ஆர் செய்துள்ளார். ஆனால்,அவர் தன்னிடம் பொய் சொல்கிறார் என தெரிந்ததும் ‘இப்படியெல்லாம் செய்யக்கூடாது’ என அறிவுரை சொல்லி அனுப்பிவிட்டு என்.எஸ்.கே-விடமும் ஒரு பெண் இப்படி ஏமாற்றியதை தனது உதவியாளரிடம் நினைவு கூர்ந்தார் எம்.ஜி.ஆர்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…