என்னம்மா...இப்படி பண்றீங்களேம்மா.....திருமணத்திற்கு முன்பே இப்படி செய்யலாமா...? படங்கள் சொல்லும் சேதி என்ன?

by sankaran v |   ( Updated:2022-11-16 02:05:30  )
padmini
X

திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது என்பது நம் இலக்கியத்தில் இல்லாத நடைமுறை. அது தவறு என்பது தான் நடைமுறை வாழ்க்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனாலும் பல தமிழ்ப்படங்களில் இந்தக் காட்சிகைள அடிப்படையாகக் கொண்டு கதை அமைக்கப் பட்டுள்ளது.

இப்படி திருமணத்திற்கு முன்பே உறவில் ஈடுபட்டு பெண்கள் கர்ப்பமாகி அதன்பின்னர் சிக்கலுக்கு ஆளாவதை மையமாகக் கொண்ட கதை அம்சம் உள்ள படங்களைப் பற்றிப் பார்ப்போம்.

ஆதித்தன் கனவு

Aathithan Kanavu

1948லேயே இந்தக் கதை வந்துவிட்டது. படத்தின் பெயர் ஆதித்தன் கனவு. நாயகி ஞானவடிவு, நாயகன் ஆதித்தன். இருவருக்கும் மணமுடித்துவிட வேண்டும் என அவர்கள் குழந்தையாக இருக்கும்போதே பெற்றோர்கள் முடிவு செய்து விடுகின்றனர். ஆனால் பெற்றோர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இரு குடும்பமும் பிரிந்து வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர்.

இதன் பின்னர் அழகா என்ற கந்தர்வ காதலர்கள் மத்தியில் ஏற்பட்ட பந்தயத்தின் காரணமாக ஞானவடிவையும், ஆதித்தனையும் தூக்கிச்சென்று ஒரே இடத்தில் அருகருகே படுக்க வைத்து விடுகின்றனர். அப்போது இருவரும் உடலுறவு கொள்கின்றனர்.

தொடர்ந்து கந்தர்வ காதலர்கள் அவர்களைப் பிரித்து விடுகின்றனர். இந்நிலையில் ஞானவடிவு கர்ப்பமாகிறாள். குழந்தையின் தகப்பன் யார் என தெரியாததால் ஊரார் கேவலமாகப் பேசுகின்றனர். இதனால் அவளது குடும்பத்தார் அனைவரும் வேறு ஊருக்குச் செல்கின்றனர். டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் சக்கை போடு போட்டது. டி.ஆர்.மகாலிங்கம், அஞ்சலிதேவி, எம்.ஜி.சக்கரபாணி உள்பட பலர் நடித்துள்ளனர்.

வாழ்க்கை

வாழ்க்கை என்ற படம் 1949ல் வந்தது. இந்தப்படத்திலும் தந்தை பட்ட கடனை அடைக்க மகள் வயதான கிழவனை திருமணம் செய்ய முற்படுகிறான். அப்போது இளைஞன் ஒருவன் தான் அந்தக் கடனை அடைக்கிறேன் என்று கூறி அவளுடன் உறவு கொள்கிறான்.

இதனால் அவள் தாயாகிறாள். அவமானம் அடைந்த நாயகி வீட்டை விட்டு ஓடி காதலனைத் தேடுகிறாள். பெற்ற குழந்தையை வளர்க்க முடியாமல் தெருவில் போட்டு விடுகிறாள். ஏவிஎம் தயாரித்து இயக்கிய படம் வாழ்க்கை. டி.ஆர்.ராமச்சந்திரன், எஸ்.வி.சகஸ்ரநாமம், கே.சாரங்கபாணி, வைஜெயந்திமாலா உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஓர் இரவு

Oar Iravu

1951ல் வெளியான படம் ஓர் இரவு. ஏழைக்குடும்பத்தில் பிறந்த பெண் ஒருவள் தன்னைக் காதலிக்கும் ஜமீன்தாரின் ஆசை வார்த்தையில் மயங்கி அவனுடன் உறவு கொள்கிறாள். அவரோ தனக்கு எதிர்பாராமல் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலை சரிசெய்ய பணக்கார பெண்ணை திருமணம் செய்கிறார்.

காதலன் கைவிட்ட நிலையில் ஏழைப் பெண் தன் மகனை வளர்க்க வழியில்லாமல் அனாதை இல்லத்தில் விடுகிறாள். அவமானத்துடன் வளர்ந்த அவன் பின்னாளில் சமூகவிரோதி ஆகிறான். அறிஞர் அண்ணா எழுதிய கதை. வசனம் எழுதியதும் அவரே. ப.நீலகண்டன் இயக்கியுள்ளார். ஏ.நாகேஸ்வரராவ், பி.எஸ்.சரோஜா உள்பட பலர் நடித்துள்ளனர்.

பணம்

Panam

1952ல் வெளியான பணம் படத்திலும் இதே கதைதான். தன்னுடன் படிக்கும் முற்போக்கான இளைஞனுடன் காதல் கொண்டு உடலைக் கொடுத்து ஏமாந்து விடுகிறாள். விளைவு மணமாகாமலேயே தாய்மை அடைகிறாள்.

இதை அறியும் அவளது அண்ணி அந்த இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறாள். ஆனால், அது முடியாமல் போய்விடுகிறது. சிவாஜிகணேசன், பத்மினி, என்.எஸ்.கே. உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை இயக்கியவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

மருமகள்

தொடர்ந்து 1953ல் மருமகள், அழகி ஆகிய படங்களிலும் இதே கதைதான். 1954ல் கனவு, அம்மையப்பன், 1955ல் ஏழை படும்பாடு, 1957ல் நீலக்குயில், 1979ல் பட்டாக்கத்தி பைரவன் வரை மணமாகாமலேயே கர்ப்பம் ஆகும் கதை தான்.

புதிய பாதை

Puthiya pathai

1989ல் பார்த்திபன் நடித்து இயக்கிய படம் புதிய பாதை. இந்தப்படத்தில் பணத்திற்காக நாயகியை கெடுத்து விடுகிறான். அதன் காரணமாக மணமாகாமலேயே கர்ப்பமாகும் நாயகி அவனை துணிந்து மணம் செய்து திருத்தி நல்லவனாக்குகிறாள்.

பார்த்திபன், சீதா, வி.கே.ராமசாமி, மனோரமா, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து மாபெரும் வெற்றி பெற்றது. நடிகர் பார்த்திபனுக்கு திரையுலக வாழ்வில் புதிய பாதையை அமைத்துக் கொடுத்தது.

Next Story