கண்களை மையமாகக் கொண்டு மிரட்டிய தமிழ்ப்படங்கள் - ஒரு பார்வை
நமது உடலில் மிக மிக முக்கியமான உறுப்பு எது என்றால் கண் தான். இது தெரிந்தால் தான் நாம் உலகையேப் பார்க்க முடியும். கண்ணில்லாவிட்டால் அவன் குருடன் ஆகிறான். இருட்டு உலகில் நடமாடுகிறான்.
உலகை ரசித்து அனுபவிக்க வேண்டுமானால் அதற்கு முதல் தேவை கண் தான். நாம் ஏராளமான விஷயங்களைப் பாடங்களாகக் கற்றுக்கொள்வதற்கு தேவைப்படும் ஒரே உறுப்பு கண் தான்.
அதனால் தான் அதன் மூலம் நாம் பார்ப்பதை பார்வை என்கிறோம். பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும். பார்த்து நடந்தால் பயணம் தொடரும். பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும். கதவு திறந்தால் காட்சி கிடைக்கும். காட்சி கிடைத்தால் கவலை தீரும். கவலை தீர்ந்தால் வாழலாம். என்று அன்றைய பாடல் நம் கண்ணின் பெருமையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
இப்போது கண்களை மையமாகக் கொண்டு தலைப்பாக எடுக்கப்பட்ட படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
கண்களால் கைது செய்
2004ல் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் கைவண்ணத்தில் உருவான படம். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.
எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதியுள்ளார். வசீகரன், பிரியாமணி, இளவரசு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர். அழகிய சின்ட்ரெல்லா, அனார்கலி, ஆழ தமிழம்மா, என்னுயிர் தோழி, தீக்குருவி ஆகிய பாடல்கள் உள்ளன.
அதே கண்கள்
1967ல் ஏவிஎம்மின் படைப்பில் ஏ.சி.திருலோகச்சந்தரின் இயக்கத்தில் வெளியான படம். ரவிச்சந்திரன், காஞ்சனா உள்பட பலர் நடித்துள்ளனர். வேதா இசை அமைத்துள்ளார். இது ஒரு திகில் படம். 2017ல் இதே பெயரில் மற்றொரு திகில் படம் வெளியானது.
ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் இந்தப்படம் வெளியானது. ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். கலையரசன், ஜனனி, ஷிவிடா, பால சரவணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஐ
2015ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் ஷங்கர். விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ்கோபி, சந்தானம், சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். 100 கோடி ரூபாயில் உருவான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப்படத்தின் ஆங்கில உச்சரிப்புக்கு தமிழில் நான் என்றும், இன்னொரு பார்வையில் பார்த்தால் அதற்கு கண் என்றும் பொருள்படுகிறது. இந்தப்படத்தில் விக்ரமின் மாறுபட்ட மேக் அப்பைக் கண்டு ரசிக்கலாம். ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கும் விக்ரமின் நடிப்பு செம மாஸாக இருக்கும்.
இந்தப்படத்தில் செட்டிங்குகளும், கிராபிக்ஸ்சும் நம்மை மிரள வைக்கின்றன. இது ஒரு அறிவியல் சார்ந்த விஞ்ஞானப் படம். பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின. மெர்சலாயிட்டேன், என்னோடு நீ இருந்தால், லேடியோ, பூக்களே சற்று ஓய்வெடுங்கள், அய்ல அய்ல, என்னோடு நீ இருந்தால் ஆகிய பாடல்கள் உள்ளன.
கண் சிமிட்டும் நேரம்
1988ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் கலைவாணன் கண்ணதாசன். சரத்குமார் தயாரித்துள்ளார். கார்த்திக், அம்பிகா, பூர்ணம் விஸ்வநாதன், எஸ்.எஸ்.சந்திரன், செந்தில், குட்டி பத்மினி, டிஸ்கோ சாந்தி உள்பட பலர் நடித்துள்ளனர். வி.எஸ்.நரசிம்மன் இசை அமைத்துள்ளார்.
கண்ணே கலைமானே
சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தமன்னா ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் வடிவுக்கரசி, வசுந்தரா காஷ்யப் உள்பட பலர் நடித்துள்ளனர்.