உங்க தியேட்டர் ஹவுஸ்புல்லு!.. ஆனா அது உங்களுக்கே தெரியாது!.. தியேட்டர் ஓனருக்கே வடை சுட்ட ரஜினி ரசிகர்கள்!.

சென்னையில் உள்ள உட்லாண்ட்ஸ் தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தை அதிரடியாக தூக்கி விட்டு எம்ஜிஆர் நடித்த ரிக்‌ஷாக்காரன் படத்தை போட்டதை பார்த்த ரஜினிகாந்த் ரசிகர்கள் நடிகர் விஜய்யையும் அவரது ரசிகர்களையும் பயங்கரமாக ஓட்டி வருகின்றனர்.

உடனடியாக உட்லாண்ட்ஸ் தியேட்டர் ஓனர் இதுவரை எந்த படத்துக்கும் வராத கலெக்‌ஷன் விஜய் நடித்த லியோ படத்துக்குத்தான் எங்கள் தியேட்டருக்கு கிடைத்துள்ளது என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அடுத்து அவர் அளித்த பேட்டியும் தற்போது ரஜினி ரசிகர்களுக்கு ஆப்பாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: லியோவிடம் மண்டியிட்ட ஜெயிலர்!.. அய்யய்யோ.. மீசையை எடுத்துட்டாரா மீசை ராஜேந்திரன்.. என்ன ஆச்சு?..

ஆகஸ்ட் மாதம் ஒரு பெரிய சூப்பர்ஸ்டார் படம் ரிலீஸ் ஆனது. அந்த படத்தை என் தியேட்டர்ல நான் போடவே இல்லை. டிராக்கர்கள் என்னிடமே வந்து சார், உங்க தியேட்டர்ல ஜெயிலர் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுதுன்னு சொன்னாங்க என ஒட்டுமொத்தமாக ரமேஷ் பாலாவையும் மனோபாலா விஜயபாலனையும் அசிங்கப்படுத்தி விட்டார் உட்லாண்ட்ஸ் தியேட்டர் ஓனர்.

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் 525 கோடி தான் என சன் பிக்சர்ஸ் கடைசியாக அறிவித்த நிலையில், அந்த படம் 700 கோடி வசூல் ஈட்டியது என இந்த இருவரும் தான் பொய்யான பாக்ஸ் ஆபிஸ் அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தனர் என விஜய் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாக்கக் கூடாதுனு தடுத்தாங்க! தல செஞ்ச வேலைய பார்த்து மிரண்டுட்டேன் – இப்படியெல்லாம் இருப்பாரா அஜித்?

மேலும், லியோ படத்தை தூக்கி விட்டு ரிக்‌ஷாக்காரன் போட்டுட்டாங்கன்னு கலாய்த்தீர்களே, உங்க படத்தை அந்த தியேட்டர்க்காரன் ஒரு படமாவே மதிக்கலயே என ரஜினிகாந்தையும் ரஜினி ரசிகர்களையும் இன்சல்ட் பண்ணி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

Related Articles
Next Story
Share it