Cinema News
திட்டம்போட்டு காலி பண்ணிட்டாங்க!.. கங்குவா படத்துக்கு நேர்ந்த கதி?!.. தியேட்டர் ஓனர் சொன்ன தகவல்!..
கங்குவா படத்தை திட்டம் போட்டு காலி செய்துவிட்டார்கள் என்று உட்லண்ட்ஸ் திரையரங்கு ஓனர் பேசி இருக்கின்றார்.
சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். 300 கோடிக்கு மேல் செலவு செய்து இப்படத்தை தயாரித்ததாக தயாரிப்பாளர் சார்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது. சூர்யாவின் கெரியரில்லேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் கங்குவா.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் சரிவினை சந்தித்து வருகின்றது. படம் 2000 கோடி வசூல் செய்யும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நம்பிக்கொண்டிருந்த நிலையில் அந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளி கொட்டி விட்டார் இயக்குனர் சிறுத்தை சிவா.
இதையும் படிங்க: 4 ஆண்டுகளில் 139 படத்தில் ஹீரோ அப்பா… 13 வருடத்தில் 36 படம் நடித்த ஹீரோ மகன்… யார் தெரிதா?
படம் தற்போது 200 கோடியை தாண்டினாலே பெரிய விஷயம் என்பது போல் பார்க்கப்பட்டு வருகின்றது. இதனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. படத்தைக் காப்பாற்றுவதற்கு தொடர்ந்து திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது கருத்துக்களை கூறி வந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. அது மட்டும் இல்லாமல் படக்குழுவு சார்பாக படத்தில் முதல் 20 நிமிடத்தில் 12 நிமிட காட்சிகளை வெட்டி விட்டனர்.
மேலும் அதீத சத்தம் இருந்ததாக புகார் வந்த நிலையில் அதையும் குறைத்து இருக்கிறார்கள். இதனால் கங்குவா திரைப்படம் பிக்கப் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கிடையில் சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கு ஓனர் கங்குவா திரைப்படம் குறித்து பேசி இருக்கின்றார். கங்குவா படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தி இருக்கின்றது.
இருந்தாலும் படக்குழுவினர் தொடங்கி பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் படத்திற்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். பொதுவாக படத்தை எடுத்தவர்கள் தங்கள் படத்திற்கு ஆதரவான கருத்துக்களை கூறுவது என்பது வாடிக்கையான விஷயம் தான். படம் குறித்து ரசிகர்கள் கூறும்போதுதான் அப்படம் வெற்றி படமாக தீர்மானிக்கப்படுகின்றது.ஒரு பெரிய நடிகரின் படம் என்பது முதல் 3 நாட்களுக்கு அசால்டாக வசூல் செய்யும்.
அதன் பிறகு குடும்ப ரசிகர்கள், ஜெனரல் ஆடியன்ஸ் படம் பார்க்க வரும்போது தான் படத்தின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான படங்களில் சில படங்கள் மக்களிடையே மிகப்பெரிய ஆதரவை பெற்று மாபெரும் வெற்றி படமாக மாறி இருக்கின்றது.
இதையும் படிங்க: மீண்டும் இணையும் ஜீவி மற்றும் சைந்தவி.. இதுதான் அண்டர்ஸ்டேட்டிங்! கத்துக்கோங்கப்பா
அப்படி பார்த்தால் கருடன், மஹாராஜா, ரப்பர் பந்து, ஸ்டார், அமரன் போன்ற படங்களை நாம் கூறலாம். கங்குவா படம் சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறவில்லை. பெரும்பாலான ரசிகர்கள் குறைகளை மட்டுமே கூறினார்கள். படம் தொடர்பாக விமர்சகர்கள் தேவையில்லாத கருத்துக்களை கூறி திட்டமிட்டு காலி செய்து இருக்கிறார்கள்’ என்று அவர் கூறியிருக்கின்றார்.