சிவக்குமாரும், ஜெய்சங்கரும் பண்ணாத லூட்டி கிடையாது… அப்படி என்ன செஞ்சாங்க?..

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகர் அனைத்து வகையான ஆடியன்ஸ்களிடம் வரவேற்பு பெற்று விட முடியாது. சிலர் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு பெறுவார்கள். சிலர் கல்லூரி மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெறுவார்கள். எம்.ஜி.ஆரை பொருத்தவரை அவருக்கு பாமர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

ஏனெனில் பாமர மக்களுக்காக போராடும் ஒரு கதாநாயகனாகத்தான் எம்.ஜி.ஆர் அதிக படங்களில் நடித்து வந்தார். அதேபோல பாமர மக்கள் செய்யும் தொழில்களான ரிக்ஷா ஓட்டுதல், படகோட்டி போன்ற தொழில்களை செய்யும் கதாநாயகனாகவே எம்.ஜி.ஆர் மக்களிடம் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.

Sivakumar

Sivakumar

அவருக்கு அதிக வரவேற்பு இருந்தது. அதேபோல சிவாஜி கணேசனுக்கும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது ஆனால் அப்போதைய காலகட்டத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே எம்.ஜி.ஆர், சிவாஜி மிகவும் பிரபலமாக இருக்கவில்லை.

கல்லூரி மாணவர்களிடையே பிரபலம்:

இத்தனைக்கும் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் கூட சில படங்களில் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். வயதான நிலையில் கல்லூரி மாணவர்களாக நடித்ததால் மாணவர்கள் இடையே அவர்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அப்பொழுது சிவக்குமாரும் நடிகர் ஜெய்சங்கரும் மிகவும் இளைய வயதாக இருந்தனர்.

Jaishankar

Jaishankar

இதனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து அவர்களுக்கு வரவேற்பு இருந்தது. முக்கியமாக கதாநாயகிகள் பலரும் கூட சிவகுமாரிடமும் ஜெய்சங்கரிடமும் அதிகமாக நெருங்கி பழகியதாக பிரபல சினிமா ஆலோசகர் காந்தராஜ் கூறுகிறார். அப்போதைய காலகட்டத்தில் இஜெய்சங்கரும் சிவகுமாரும் நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தது பரவலாக பேசப்பட்டது.

எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பிறகு அவர்கள் வைத்தது தான் சட்டம் இன்னும் அளவிற்கு கெத்து காட்டியவர்கள் சிவக்குமாரும் ஜெய்சங்கரும்தான் என அவர் கூறியுள்ளார்.

 

Related Articles

Next Story