×

கொரோனா உருவானது சீனாவில்தான்!... விடாத அமெரிக்கா... நக்கலடிக்கும் சீனா...

 
america

கடந்த வருடம் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஒன்றிரண்டாக இந்தியாவில் பரவிய கொரோனா மெல்ல மெல்ல பரவி மார்ச் மாதம் அதிகரித்தது. எனவே, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. கொரோனா வைரஸுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து , ஜெர்மன், ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது அந்த நாடுகள் கொரோனாவிலிருந்து மீண்டு வருகிறது.

அதேநேரம் சீனாவின் வுஹானா மாநிலத்தில் 2019 இறுதியிலேயே கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாகவும், கொரோனா வைரஸ் உற்பத்தி ஆனதே சீனாவின் வுஹானா மாநிலத்தில் உள்ள ஒரு நுண்ணுயிரி ஆய்வகத்தில்தான் என அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே அந்த ஆய்வகத்தில் இருந்து 2 விஞ்ஞானிகள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை கூறுகிறது. மேலும், இது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என அமெரிக்க வலியுறுத்தி வருகிறது.

ஆனால், இதை சீனா மறுப்பு தெரிவித்து வருகிறது. அமெரிக்க ஆய்வகங்களில் இருந்தும் கூட கொரோனா பரவி இருக்கலாம் என நக்கலாக பதிலளித்துள்ளது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News