×

சாந்தோம் தேவாலயத்தில் அத்திமீறல் – அர்ஜுன் சம்பத்தால் சர்ச்சை !

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று திடீரென சாந்தோம் தேவாலயத்துக்குள் அத்துமீறி செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று திடீரென சாந்தோம் தேவாலயத்துக்குள் அத்துமீறி செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். இந்நிலையில் அவர் நேற்று மாலை திடீரென சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்துக்கு சென்றார். சாந்தோம் அருங்காட்சியகத்தை திறந்து காட்ட வேண்டும் என்றும் அங்குள்ள பொருட்களை பார்வையிட வேண்டும் எனவும் ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் அவரை அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமான அர்ஜுன் சம்பத், அவர்களிடம் வாக்குவாதம் செய்துவிட்டு திரும்பி வருவேன் எனக் கூறி அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதையடுத்து போலீஸாருக்கு தகவல் சொல்லப்பட தேவாலயத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News