×

கழிவறையில் கேமரா பொருத்திய நபர் – அமெரிக்க விமானத்தில் பரபரப்பு !

அமெரிக்க விமானம் ஒன்றில் கழிவறையினுள் ரகசியக் கேமரா ஒன்றைப் பொருத்திய அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சாண்டியாகோ நகரில் இருந்து ஹூஸ்டன் நகருக்குப் புறப்படும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 600க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அப்போது விமானத்தில் இருந்த பெண் ஒருவர் கழிவறைக்கு சென்ற போது அங்கு அசாதாரணமாக ஒளி ஒன்று ஏற்பட்டுள்ளது. அதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண் விமான ஊழியர்களிடம் அதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதையடுத்து ஊழியர்கள் சோதனை செய்ததை அடுத்து
 
கழிவறையில் கேமரா பொருத்திய நபர் – அமெரிக்க விமானத்தில் பரபரப்பு !

அமெரிக்க விமானம் ஒன்றில் கழிவறையினுள் ரகசியக் கேமரா ஒன்றைப் பொருத்திய அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள  சாண்டியாகோ நகரில் இருந்து ஹூஸ்டன் நகருக்குப் புறப்படும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 600க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அப்போது விமானத்தில் இருந்த பெண் ஒருவர் கழிவறைக்கு சென்ற போது அங்கு அசாதாரணமாக ஒளி ஒன்று ஏற்பட்டுள்ளது. அதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண் விமான ஊழியர்களிடம் அதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

அதையடுத்து ஊழியர்கள் சோதனை செய்ததை அடுத்து அது ரகசியக் கேமரா என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் ரகசியக் கேமரா வீடியோக்களை வைத்துப் பார்க்கும்போது மலேசியாவை சேர்ந்த லீ எனும் இளைஞர்தான் அந்த கேமராவைப் பொறுத்தியிருப்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்த விசாரணையை காவல்துறை மேற்கொள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடுமையானத் தண்டனை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News