×

இந்தியாவிலும் நுழைந்த கொரோனா - உறுதி செய்த மத்திய சுகாதாரத்துறை 

இந்தியாவில் 2 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது மத்திய சுகாதாரத்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நோய்க்கு சீனாவில் இதுவரை பல ஆயிரம் பேர் இறந்து விட்டனர். பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கோரோனா வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒருவருக்கும் மற்றும் தெலுங்கானாவில் ஒருவருக்கும் இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் சமீபத்தில் இத்தாலி சென்று திரும்பியுள்ளார். தெலுங்கானாவை சேர்ந்தவர் சமீபத்தில் துபாய் சென்று திரும்பியுள்ளார்.

இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News