×

இன்று தோன்றும் சூரிய கிரகணத்தால் 5 ராசிக்கு பலன் உண்டு.. எது எது தெரியுமா?...

 
sun

இந்த ஆண்டின் முதல் கங்கண சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ளது. இந்தியாவில் அருணாச்சல பிரதேசத்தில் சில நிமிடங்கள் மட்டும் இந்த கிரகணத்தை பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி வேறு இந்தியாவின் வேறு எந்த பகுதியில் இருந்து பார்த்தாலும் இந்த கிரஹணம் தெரியாது என கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், கிழக்கு ரஷ்யா, ஆர்ட்டிக் கடல் பகுதி, க்ரீன்லாந்தின் மேற்குபகுதி, கனடா, வட கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யாவின் சில பகுதிகள் மற்றும் ஆசியாவின் வட பகுதிளிலும் இந்த கிரகணத்தை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று பகல் 1.42 மணி முதல் மாலை 6.41 மணி வரை இந்த கிரகணம் நிகழவுள்ளது. 

இந்த கிரஹத்தால் கடகம்,சிம்மம்,விருச்சகம்,தனுசு, கும்பம் போன்ற ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News