×

புத்தாண்டு வாழ்த்தை சொல்லி சூடேற்றிய ஹாலிவுட் நடிகை

ஹாலிவுட்டின் பிரபல நடிகையான சல்மா ஹெய்க், பிகினியில் இருக்கும் படத்துடன் ரசிகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக் கூறியிருக்கிறார். 
 

மெக்சிகோவைச் சேர்ந்த சல்மா ஹெய்க் நடிப்பில் மட்டுமல்லாமல் இயக்கம், தயாரிப்பு என ஹாலிவுட்டில் கோலோச்சியவர். கடந்த செப்டம்பரில் 54 வயதை நிறைவு செய்த சல்மா ஒரு ஃபிட்னெஸ் ஃபிரீக். 50 வயதைக் கடந்தும் ஃபிட்டாக இருக்கும் அவர், இன்ஸ்டாவில் ஆக்டிவாக பயணித்து வருகிறார். 

பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்து தொழிலதிபராகவும் வலம்வரும் அவர், அவ்வப்போது பிகினி படங்களைப் பகிர்ந்து ரசிகர்களின் லைக்ஸை அள்ளி வருகிறார். அந்த வகையில் 2021-ம் ஆண்டை பிகினி ஃசெல்பியோடு தொடங்கியிருக்கிறார். சல்மா பகிர்ந்த பிரவுன் பிகினி போட்டோ இன்ஸ்டாவில் மில்லியன்கணக்கான வியூஸ்களை அள்ளியிருக்கிறது. சக நடிகையான பிரியங்கா சோப்ரா, `நிறுத்துங்கள்’ என விளையாட்டாக கமெண்டடிக்க அதுவும் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாவில் 1.68 கோடி பேர் சல்மாவை பின்தொடருகிறார்கள். 54 வயதிலும் சைஸ் ஜீரோவை மெயின்டெயின் பண்ணும் சல்மாவின் இந்த லேட்டஸ்ட் பிகினி செல்ஃபி போட்டோவுக்கு இதுவரை 18 லட்சத்துக்கும் மேல் லைக்ஸ் குவிந்திருக்கிறது. 

சமீபத்தில் லாவண்டர் பிகினியில் 2020-க்கு விடைகொடுக்கும் விதமாக சல்மா பகிர்ந்த போட்டோவும் வைரலானது.

From around the web

Trending Videos

Tamilnadu News