×

கொரோனா வைரஸால் பாதிப்பா? - நடிகர் ஜாக்கிசான் விளக்கம்
 

தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தி குறித்து ஜாக்கிசான் விளக்கமளித்துள்ளார்.
 

நடிகர் ஜாக்கிசான் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டார். அவ்விழாவில் கலந்து கொண்ட ஒரு போலீஸ் அதிகாரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது எனவும், அப்போது ஜாக்கிசானுக்கும் பரிசோதனை நடந்தது எனவும் செய்திகள் வெளியானது.

இதைக்கேட்டு உலகமெங்கும் உள்ள ஜாக்கிசான் ரசிகர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தனர். இந்நிலையில், இதுகுறித்து ஜாக்கிசான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்

எல்லோரின் அக்கறைக்கும் நன்றி.. நான் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறேன். என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். என்னை எங்கும் அடைத்து வைக்க வில்லை. எல்லோரும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள்’ என நம்புகிறேன்.

From around the web

Trending Videos

Tamilnadu News