×

திரௌபதி முதல் நாள் வசூல் இவ்வளவா ? ஆச்சர்யத்தில் தமிழ் சினிமா !

நேற்று வெளியான திரௌபதி திரைப்படம் தமிழகம் முழுவதும் முதல் நாள் மட்டும் ஒரு கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 

நேற்று வெளியான திரௌபதி திரைப்படம் தமிழகம் முழுவதும் முதல் நாள் மட்டும் ஒரு கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

எந்த விதமான பெரிய நடிகர், நடிகைகள் இல்லாமல் பிரபலம் ஆகாத ஒரு இயக்குனர் இயக்கி இருக்கும் திரைப்படமான திரௌபதி படம் நேற்று வெளியாகியது. தமிழகத்தில் 330 திரையரங்குகளில் வெளியானதாக சொல்லப்படும் இந்த திரைப்படம் முதல் நாளிலேயே 1 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது அந்த படத்தின் பட்ஜெட்டை விட அதிகம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வார விடுமுறை நாட்களில் இன்னும் கூட்டம் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்னும் வசூல் அதிகமாகும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தைப் பார்க்க வட மாவட்டங்களில் உள்ள சில சமுதாய மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதாகவும், சில சமுதாய அமைப்புகள் டிக்கெட்களை மொத்தமாக வாங்கிக் கொடுத்து மக்களை அனுப்புவதாகவும் சொல்லப்படுகிறது.

அதே போல சாதிய பிளவுகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News