×

கொரோனாவே முடியல..அதுக்குள்ள அடுத்த மர்ம நோயா?... பீதியில் மக்கள்...

 
brain

உலகமெங்கும் கொரோனா வைரஸின் 2வது அலை பரவி வருகிறது. இதில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருபக்கம் சிலர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோக மஞ்சள் பூஞ்சை, வெள்ளை பூஞ்சை என்றெல்லாம் பீதியை கிளப்பினார்கள்.         

இந்நிலையில், கனடா நாட்டில் மூளையை தாக்கும் ஒரு புதிய வைரஸ் பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். பார்வை குறைபாடு, நினைவுத்திறன் குறைதல், தூக்கமின்மை போன்றவைதான் இந்நோயின் அறிகுறிகள் என கூறப்பட்டுள்ளது. இந்நோய் எப்படி உருவானது என்பது பற்றி அந்நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News