×

இரண்டாவது டெஸ்ட்டிலும் ஏமாற்றமே – தத்தளிக்கும் இந்திய பேட்டிங் !

இந்தியாவுக்கும் நியுசிலாந்துக்கும் எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

 

இந்தியாவுக்கும் நியுசிலாந்துக்கும் எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. இந்திய அணியில் பிருத் வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும்  இறங்கினர்.

ஒருபுறம் பிருத்வி ஷா அதிரடியாக விளையாடினார். ஆனால் மயங்க் 7 ரன்கள் எடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் வந்த புஜாரா விக்கெட்டை இழக்காமல் நிதானமாக விளையாட பிருத்வி ஷா அதிரடியாக அரைசதம் அடித்து 54 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் வந்த கோலி 3 ரன்களிலும், ரஹானே 7 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.

இதனால் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து தடுமாறிக் கொண்டு இருக்கிறது. தற்போது களத்தில் புஜாரா (47) மற்றும் ஹனுமா விஹாரி (10) இருவரும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இந்திய அணி 143 ரன்கள் சேர்த்துள்ளது. நியுசிலாந்து தரப்பில் சவுத்தி அதிகபட்சமாக 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News