×

பல ஆப்பு வெச்சாலும் இது ஸ்பெஷல் ஆப்பு - சீமான் கட்சி நபர் வெளியிட்ட சர்ச்சை வீடியோ

சீமானின் நாம் தமிழர் கட்சியின் இளைஞரனி மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் சமீபத்தில் ஸ்ரீபெரும்பத்தூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தின் அருகே நின்று சீமான் ஆவேசமாக பேசிய வசனத்தை டிக்டாக் வீடியோவாக வெளியிட்டார்
 

அந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து கிண்டலடித்தனர். மேலும், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சீமானுக்கு அவரே ஆப்பு வைத்துவிட்டதாக நெட்டிசன்கள் கிண்டலடிக்க துவங்கி விட்டனர்.

இந்நிலையில், தற்போது தெரியாமல் அப்படி வீடியோ வெளியே பதிவிட்டதாகவும், சிறிது நேரத்தில் தனது தவற்றை உணர்ந்து அதை அழித்துவிட்டதாகவும், அந்த வீடியோவால் யாரேனும் மனது பாதிக்கப்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News