×

அதிசயம் ஆனால் உண்மை…..மகளுக்கு பால் கொடுக்க கோமாவில் இருந்து எழுந்த தாய்….

குழந்தையின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்த பெண் ஒருவர் தீடீரென கண்முழித்த சம்பவம் அர்ஜெண்டினாவில் நடந்துள்ளது. அர்ஜெண்டினா நாட்டின் சான் பிரான்சிகோ நகரில் வசித்து வந்தவர் மரியா லாரா(42). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது. இவர் கடந்த மாதம் மோட்டார் சைக்கிளில் சென்ற போது சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டு தலையில் அடிப்பட்டு சுயநினைவை இழந்தார். பல நாட்களாக அவர் கோமாவில் இருந்ததால் அவர் விரைவில் மூளை சாவு அடைந்து விடுவார் என மருத்துவர்கள்
 
அதிசயம் ஆனால் உண்மை…..மகளுக்கு பால் கொடுக்க கோமாவில் இருந்து எழுந்த தாய்….

குழந்தையின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்த பெண் ஒருவர் தீடீரென கண்முழித்த சம்பவம் அர்ஜெண்டினாவில் நடந்துள்ளது.

அர்ஜெண்டினா நாட்டின் சான் பிரான்சிகோ நகரில் வசித்து வந்தவர் மரியா லாரா(42). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது. இவர் கடந்த மாதம் மோட்டார் சைக்கிளில் சென்ற போது சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டு தலையில் அடிப்பட்டு சுயநினைவை இழந்தார்.

பல நாட்களாக அவர் கோமாவில் இருந்ததால் அவர் விரைவில் மூளை சாவு அடைந்து விடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவரின் உறுப்புகளை தானம் செய்யும்படியும் அறிவுறுத்தினர். ஆனால், தன் மனைவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கும்படி அவரின் கணவர் மார்ட்டின் மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், கடந்த வாரம் மருத்துவமனைக்கு சென்ற அவரின் 2 வயது மகள், மரியாவின் மார்பில் படுத்து தனக்கு மிகவும் பசிப்பதாகவும், பால் வேண்டும் எனவும் கேட்டது. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கோமாவில் இருந்து கண்விழித்த மரியா குழந்தைக்கு சிறிதுநேரம் பால் கொடுத்துவிட்டார். ஆனால், சிறிது நேரத்தில் மீண்டும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

இது மரியாவின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மரியாவின் தாய்மை உணர்வை கண்டு அவர்கள் மெய்சிலிர்த்து கண்ணீர் விட்டனர். மரியா விரைவில் கோமாவிலிருந்து மீள்வார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News