ச்சீ.. ச்சீ.. என்ன பழக்கம் இது.. மஞ்சு வாரியரை அதுவும் அந்த இடத்தில் சீண்டிய இளைஞர்.. ஷாக்கான ஃபேன்ஸ்!

நடிகை மஞ்சு வாரியர் கடை திறப்பு விழாவில் பங்கேற்று விட்டு காரில் ஏறும் போது ரசிகர்கள் அவரை சூழ்ந்துக்கொண்டு போட்டோ எடுத்துக்கொண்டிருக்கும் போது கூட்டத்தில் ஒருவர் மஞ்சு வாரியரிடம் அத்துமீறிய வீடியோ வெளியாகி ஷாக்கை கிளப்பியுள்ளது.
மலையாள லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மஞ்சு வாரியர் சாட்சியம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அவர் சல்லாபம், ஈ புழையும் கடந்நு , தூவல் கொட்டாரம், களியாட்டம், சம்மர் இன் பெத்லஹேம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகர் திலிப்பை திருமணம் செய்துக்கொண்ட இவர் சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு சற்று விலகியிருந்தார். பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.

மஞ்சு வாரியர் ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார், அது அவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு தமிழில் தனுஷுடன் அசுரன், அஜித்துடன் துணிவு, ரஜினிகாந்துடன் வேட்டையன், விஜய் சேதுபதியுடன் விடுதலை 2 ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும், மஞ்சு வாரியர் மிஸ்டர் எக்ஸ் படத்திலும் நடித்து வருகிறார்.
நடன கலையில் பயிற்சி பெற்ற மஞ்சு வாரியர் உலக நடன தினத்தை முன்னிட்டு குச்சிப்புடி நடனமாடி வீடியோ ஒன்றைக்கூட வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது கடை திறப்பு விழாவிற்கு சென்ற மஞ்சு வாரியர் காரில் ஏறி கிளம்பும் போது ரசிகர்கள் சூழ்ந்துக்கொண்டு புகைப்படங்களை எடுக்கத் தொடங்கினர். அதில் ஒருவர் மட்டும் அத்துமீறி மஞ்சு வாரியரின் இடுப்பில் கிள்ளிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சு வாரியரை கூட்டத்தில் தப்பான நோக்கத்துடன் அந்த நபர் தொட்டார் என பலரும் கண்டித்து வருகின்றனர்.