‘பாபா’ படம் தோல்வி!..பார்ட்டி வைத்து கொண்டாடிய அந்த நடிகர்!..
80, 90 களில் தன்னுடைய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும் மின்னிக் கொண்டிருந்த நடிகர் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு மிகப்பெரிய ஹிட் படத்தை ‘படையப்பா’ படத்தின் மூலம் கொடுத்தார். படையப்பா படம் ரஜினியின் கெரியரில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படமாக அமைந்தது.
ஆனால் அதன் பின் படங்கள் வெற்றி பெறுமா என்று பார்த்தால் நீண்ட கேப்புக்கு பிறகு பாபா படம் வந்தது. அதுவும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கம் என்று செய்திகள் வந்ததும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் ஏற்கெனவே ரஜினியை வைத்து சுரேஷ் கிருஷ்ணா அண்ணாமலை மற்றும் பாட்ஷா போன்ற படங்களை கொடுத்ததன் காரணம் தான்.
இதையும் படிங்க : 13 நாள் தான் கால்ஷீட்!..ரஜினியின் இந்த கெடுவால் பரிதவித்த ஏவிஎம் நிறுவனம்!..படம் என்னாச்சுனு தெரியுமா?..
எப்பேற்பட்ட படங்கள் அவை இரண்டும். அதன் காரணமாகவே பாபா படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. மேலும் இந்த பாபா படம் ரஜினியின் சொந்த தயாரிப்பில் தயாரிக்க பட்ட படமும் கூட. கூடுதல் தகவல் என்னவெனில் படையப்பாவுக்கு பிறகு ரஜினி இந்த படத்தில் நீண்ட நாள்களுக்கு பிறகு நடிக்கிறார் என்பதால் பாபா படத்தின் எந்தவொரு அப்டேட்டையும் வெளிவிட கூடாது என படக்குழு கவனமாக இருந்தது.
ஒரு வழியாக படம் வெளியானது. முதல் நாளிலேயே படம் மண்ணை கவ்வியது. பெருத்த தோல்வி. ரஜினியின் மத்தியிலும் வினியோகஸ்தரர்கள் மத்தியிலும் பெரும் ஏமாற்றத்தை தந்தன. இரண்டு நாள்கள் ரஜினி வெளியே வரவில்லையாம். ஆனால் இதற்கு மத்தியில் பாபா படத்தின் தோல்வியை ஒரு பிரபல நடிகர் பார்ட்டி வைத்து கொண்டாடியதாக பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்தார். இதை அறிந்த ரஜினிக்கு மேலும் வேதனையை அளித்ததாகவும் கூறினார்.