
Cinema News
சூர்யா செய்த மோசமான செயல்.. மேடையில் உண்மையை கொட்டி தீர்த்த பிக் பாஸ் சினேகன்.!
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் விருமன். இப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு படக்குழுவினரை சார்ந்த பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
அதுபோல், இந்த இசை வெளியீட்டு விழாவில் கார்த்தி மற்றும் சூர்யா என இப்படத்தில் நடித்த சிறிய கதாபாத்திரம் முதல் பெரிய கதாபாத்திரம் வரை அனைவரும் மேடை ஏறி பேசினார்கள். ஆனால், பாடலாசிரியர்கள் யாருமே வந்து மேடை ஏறி பேசியதாக தெரியவில்லை.
இதையும் படிங்களேன் – அடுத்தடுத்த பெரிய படங்கள்.. ஒரே மாசத்தில் 80 கோடி சம்பளம்.! மச்சக்கார மக்கள் செல்வன்.!
அந்த வகையில், அவர்கள் யாரேனும் இந்த விழாவிற்கு வருகை தந்திருந்தனரா கூட தெரியவில்லை. தற்போது, பாடல் ஆசிரியர் சினேகன் சமீபத்திய விழா ஒன்றில் பேசுகையில், இப்போதெல்லாம் பாடலாசிரியர்களுக்கு யாரும் கண்டுப்பதுமில்லை.
அதற்கான மரியாதை குறைந்து கொண்டே செல்கிறது என்று தெரிவித்ததோடு மதுரையில் நடந்த விருமன் இசை வெளியீட்டு விழாவில் பாடல் ஆசிரியர்களை யாரையும் அழைக்க கூட இல்லை என்று வருத்தத்துடன் பேசினார்.
இப்பொது, அவர் பேசிய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்கியதை அடுத்த இந்த வெடிபவை பார்த்த நெட்டிசன்கள், இப்படத்தை தயாரித்த நடிகர் சூர்யாவே இப்படி செய்திருக்கிறாரே? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.