Cinema News
பணம் தேவைக்கு அதிகமா இருந்தா இப்படி எல்லாம் நடக்கும்!… விஜய் ஆண்டனி கொடுத்த புதுவிளக்கம்
நடிகர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர் விஜய் ஆண்டனி. இவரது படங்கள் எல்லாமே மாறுபட்ட டைட்டிலுடன் இருக்கும். கதை அம்சமும் அழுத்தமாக இருக்கும். பிச்சைக்காரன், எமன், சைத்தான் என இவரது படங்களின் தலைப்புகளைப் பார்த்தால் நெகடிவ்வாக இருக்கும். ஆனால் படத்தைப் பார்த்தால் செமயாக இருக்கும். இவர் தற்போது நடித்து வெளிவர உள்ள படம் ரோமியோ. தமிழ்ப்புத்தாண்டை ஒட்டி திரைக்கு வருகிறது.
இதையும் படிங்க… இயக்குனருக்காக இப்படியா விட்டுக்கொடுப்பீங்க… ரஜினியின் பெருந்தன்மைக்கு யாரும் வரமாட்டங்கப்பா!
தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளிவர உள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கி உள்ளார். விஜய் ஆண்டனி, மிர்னாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். பரத் தனசேகர் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் எடிட்டிங்கையும் விஜய் ஆண்டனியே கவனித்துக் கொள்கிறார். இது அவரது சொந்தப் படம். இந்த ஒரு படம் தான் தமிழ்ப்புத்தாண்டு ரிலீசுக்கு பேர் சொல்லும் அளவில் இருப்பதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். படத்தையொட்டி தனியார் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து சிலவற்றைப் பார்ப்போம்.
தோல்வின்னா கவலைப்படக்கூடாது. நிறைய தோத்தீங்கன்னா நிறைய டிரை பண்ணிருக்கீங்கன்னு அர்த்தம். தோற்காமப் போயிட்டீங்கன்னா நீங்க டிரை பண்ணவே இல்லைன்னு அர்த்தம். அதனால தோல்வியும் வெற்றியில ஒரு பங்கு தான். தோல்வி இல்லாம வெற்றி கிடையாது. எங்கே எல்லாம் தோற்றோம்னு கவுண்ட் பண்ணி பாருங்க. அது இல்லாம அதுக்கான முயற்சியை எடுங்க. அப்ப தான் நாலெட்ஜ் வரும். தோல்வியும் நீங்க எக்ஸ்பிரியன்ஸா எடுத்துக்கிட்டா அதுவும் வெற்றி தான்.
இதையும் படிங்க… சம்பள பாக்கியா? நோ டென்சன்!.. சம்பளமே இல்லையா?.. நோ மென்சன்! இவர்தான் ரியல் ஹீரோ!..
இன்றைய காலகட்டத்துக்கு பணம் எல்லாவற்றிற்கும் தேவைப்படுகிறது. வெற்றிக்கு பணம் வந்து தேவைக்குத் தான் தேவை. அதிகமா வச்சிருந்தா அது உங்களைக் கன்ட்ரோல் பண்ணும். தேவையான அளவு மட்டும் பணத்தை வச்சிக்கிட்டு அதுக்கு மேல ஆசைப்படாம இருந்தா நல்லாருக்கும். பயங்கரமா சேர்த்துக்கிட்டே இருந்தா அதுக்கு நாம அடிமையா ஆயிடுறோம். பணத்துப் பின்னாடியே போக ஆரம்பிச்சிட்டீங்கன்னா லைஃபே போயிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ரோமியோ வரும் ஏபரல் 11ல் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.