Ilaiyaraja: இளையராஜாவின் இசை எனக்கு சுத்தமா பிடிக்காது.. இப்படி பகிரங்கமா சொல்லிட்டாரே

by Rohini |   ( Updated:2025-04-14 06:36:25  )
ilaiyaraja
X

ilaiyaraja

Ilaiyaraja:தமிழ் சினிமாவிற்கு தன்னுடைய இசையால் மிகப்பெரிய அளவில் பெருமையை சேர்த்தவர் இளையராஜா. இசை மாமேதை என்றும் இசை ஞானி என்றும் இசை கடவுள் என்றும் அவரை போற்றி வருகின்றனர். ஆரம்பத்தில் கச்சேரி மேடைகளில் பெண் குரலில் பாடி வந்தவர் தான் இளையராஜா. அதன் பிறகு சென்னைக்கு வந்து வாய்ப்புகள் தேடி அன்னக்கிளி படத்தின் மூலம் முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அவரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர் பஞ்சு அருணாச்சலம். அன்னக்கிளி படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அதுவரை எம் எஸ் விஸ்வநாதன் ஜி ராமநாதன் இவர்களின் இசையை கேட்டு வந்த ரசிகர்களுக்கு இளையராஜாவின் இசை ஒரு புதுமையை தந்தது. அதோடு கர்நாடிக் இசையையும் சேர்த்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார்.

குறிப்பாக பிராமணர்கள் இவருடைய இசைக்கு அடிமையானார்கள். கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் ,கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்களின் பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் இசையமைத்து வந்தார் .படம் ஹிட் ஆகுதோ இல்லையோ இவருடைய இசையால் தோல்வியடைய வேண்டிய படங்கள் ஹிட்டாகி இருக்கின்றன ,இந்த நிலையில் பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா இளையராஜாவை பற்றி கூறும்பொழுது அன்னக்கிளி படத்தில் அறிமுகம் ஆகும் போதே நான் இவரை பற்றி கூறியிருந்தேன்,

இதிலிருந்து 25 வருடம் இந்த தமிழ் சினிமாவை ஆளப்போவது இவர்தான் என கூறினேன், ஆனால் அவருடைய இசை எனக்கு பிடிக்கவில்லை. அவரை இசைக்கடவுள் இசைஞானி என கூறி வருகிறார்கள். அவருக்கு முன்னாடி எத்தனையோ இசை மாமேதைகள் இருந்திருக்கிறார்கள் .அவர்களில் ஒருவராக தான் அவர்களை பின்பற்றுபவர்களில் ஒருவராக தான் இளையராஜா இருந்தாரே தவிர இசைக்கு மட்டுமே இவர் ராஜாவாக இருந்து விட முடியாது.

அது மட்டுமல்ல இவர் வளர்ந்த பிறகு பாப் மார்லி போன்ற மக்கள் பாடகர்களை குப்பை என்று சொன்னார். இவரை மாதிரி தானே பாப் மார்லி ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து இசையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார் .இளையராஜாவாவது சினிமாவில் இசையை கலைக்கினார். ஆனால் பாப் மார்லி உண்மையாகவே மக்களுக்கான இசையை கொண்டு போய் புரட்சிகரமாக மக்கள் மத்தியில் சேர்த்தார் .

ஆனால் கடைசியில் பாப் மார்லியை பாராட்டா விட்டாலும் பரவாயில்லை குப்பை என சொன்னவர் இளையராஜா .இதையெல்லாம் எதிர்த்து தான் நான் பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்தேன். அப்புறம் சினிமா இசையில் இவருடைய இசையும் பத்தில் 11 தான். அடுத்து 12-வது இடத்திற்கு வந்தார் ரகுமான். ஒரு கட்டத்தில் இளையராஜாவின் பெருமை சுருங்கும் பொழுது ரகுமான் வந்தார். அவர் இசையில் பின்னி ரகளை பண்ணி விட்டார் என சாரு நிவேதிதான் கூறினார்.

Next Story