More
Categories: Cinema News latest news

இளையராஜா பாடலாசிரியரை இப்படித்தான் நடத்துவார்! எழுத்தாளார் ஜெயமோகன் காரசார பேட்டி

Ilaiyaraja: சமீப காலமாக இளையராஜாவை பற்றிய பல சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் எழுந்து வருகின்றன. இளையராஜாவின் பாட்டை கேட்காதவர் யாரும் இருந்திருக்க மாட்டார்கள். 70 காலகட்டத்தில் இருந்து இன்று வரை அவருடைய இசையை கேட்டே தான் அனைவரும் பயணித்துக் கொண்டு வருகிறோம். இளையராஜாவின் 4500 பாடல்களை எக்கோ அண்ட் அகி நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒப்பந்தம் ஒரு கட்டத்தில் இருந்தது.

அந்த ஒப்பந்தம் 2014 ஆம் ஆண்டு முடிவடைந்தது. ஒப்பந்தம் முடிந்த பிறகும் தன்னுடைய பாடல்களை எக்கோ அண்ட் அகி நிறுவனம் பயன்படுத்துவதாக சென்னை நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் தயாரிப்பாளரிடமிருந்து உரிய அனுமதி பெற்று இளையராஜா இசையை பயன்படுத்திக் கொள்ளலாம். இளையராஜாவுக்கும் இசை பாடல்கள் மீதும் தனிப்பட்ட தார்மிக சிறப்புரிமை இருக்கிறது என அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: இதுவரை தப்பான தீர்ப்பு! வெங்கட் பட்டுக்கு எதிராக கிளம்பிய புது சர்ச்சை.. அட பாவமே

இருந்தாலும் இதை எதிர்த்து இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் தன்னுடைய இசையை தன் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் மீது இளையராஜா புகார் ஒன்றை கொடுத்திருந்தார். ஆனால் குணா படத்தின் தயாரிப்பாளரிடம் உரிய அனுமதி பெற்ற பிறகு நாங்கள் இதை பயன்படுத்தினோம் என மஞ்சுமல் பாய்ஸ் பட குழு தெரிவித்துவிட்டது.

இப்படி இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடந்து கொண்டிருக்கையில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இளையராஜா குறித்து அவருடைய கருத்தை கூறியிருக்கிறார். எம் எஸ் விஸ்வநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் இடையே சரியான புரிதல் இருந்தது. அவர்களுக்குப் பிறகு அந்த ஒரு புரிதல் இப்ப உள்ள காலகட்டத்தில் இருக்கும் இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் இல்லை என்று கூறினார்.

இதையும் படிங்க: போதை ஊசி போட்டு சூட்டிங் வராம தயாரிப்பாளருக்கு தொல்லை கொடுத்த கார்த்திக்… அட அது அந்த படத்துக்கா?

அது மட்டும் அல்லாமல் இசையமைப்பாளர்கள் பீடத்தில் அமர்ந்திருக்கும் ஒரு ஆளாகவும் பாடலாசிரியர்கள் அவர்களுக்கு பணிவிடை செய்யக் கூடியவர்களாகவும் தான் இப்போதைய காலகட்டத்தில் இருக்கிறார்கள். இப்படி இளையராஜாவின் முன் பல பாடலாசிரியர்கள் அமர்ந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். எம் எஸ் விஸ்வநாதன் தனக்கு இணை கண்ணதாசன் எனக் கூறியிருக்கிறார் .

ஆனால் இந்த ஒரு புரிதல் இப்போது யாருக்குமே கிடையாது. இளையராஜாவை நான் கடவுள் போல பார்க்கிறேன். அவர் மீது எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது. ஆனால் பல பாடல் ஆசிரியர்களை அவர் மதிப்பதே கிடையாது. மரியாதை கொடுப்பதும் கிடையாது. பாடலாசிரியர்களும் ஒரு கலைஞர்கள் என்பதை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என காரசாரமாக பேட்டி கொடுத்திருக்கிறார் ஜெயமோகன்.

இதையும் படிங்க: கலைவாணருக்கும், எம்ஆர்.ராதாவுக்கும் உள்ள அந்த ஒற்றுமையை… அட ஆமா!.. இப்பதான் தெரியுது!

Published by
Rohini

Recent Posts