Connect with us
Rajinikanth

Cinema History

ஹீரோ அடிச்சாதானே கைத்தட்டுவாங்க… ஆனா இங்க என்ன உல்டாவா நடக்குது?? ரஜினி படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த கதாசிரியர்…

ரஜினிகாந்த் தொடக்கத்தில் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வந்தார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். இவ்வாறு பல திரைப்படங்களில் ரஜினிகாந்த் நெகட்டிவ் கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தாலும், பெரும்பான்மயான ரசிகர்கள் அவரது வசீகரமான நடிப்பை ரசித்து வந்தனர். இவ்வாறு நெகட்டிவ் பாத்திரங்களில் நடித்து வரும்போதே ரஜினிகாந்த்துக்கு ரசிகர் கூட்டம் உருவாகியிருந்தது.

Rajinikanth

Rajinikanth

இந்த நிலையில் ரஜினிகாந்த்துக்கு எப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒரு பிரபல கதாசிரியருக்கு ரசிகர்கள் உணர்த்திய தருணத்தை குறித்துத்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

1977 ஆம் ஆண்டு ஜெய்சங்கர், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “காயத்ரி”. இத்திரைப்படத்தை பட்டாபிராமன் இயக்கியிருந்தார். பஞ்சு அருணாச்சலம் இத்திரைப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருந்தார்.

Gayathri

Gayathri

1970களில் “தினமணி கதிர்” பத்திரிக்கையில் “காயத்ரி” என்ற கதை வெளிவந்திருந்தது. அந்த கதையை எழுதியவர் எழுத்தாளர் சுஜாதா. இந்த கதையை படித்த பஞ்சு அருணாச்சலம், அந்த கதையை படமாக எடுக்கலாம் என முடிவு செய்து எழுத்தாளர் சுஜாதாவை அணுகினார்.  சுஜாதாவும் அதற்கு ஒப்புக்கொள்ள, அந்த கதையை திரைக்கதையாக மாற்றும்போது சில மாற்றங்கள் செய்து அதனை திரைப்படமாக உருவாக்கினார் பஞ்சு அருணாச்சலம்.

Writer Sujatha

Writer Sujatha

“காயத்ரி” திரைப்படம் வெளிவந்த பிறகு அத்திரைப்படத்தை பார்க்க சுஜாதாவை அழைத்துச் சென்றார் பஞ்சு அருணாச்சலம். அப்போது ரசிகர்களின் ஆரவாரத்தை பார்த்து வியப்படைந்தாராம் பஞ்சு அருணாச்சலம்.

Panchu Arunachalam

Panchu Arunachalam

அதாவது அத்திரைப்படத்தில் ரஜினி வில்லனாக நடித்திருந்தார். ஜெய்சங்கர் அத்திரைப்படத்தின் ஹீரோ. சண்டைக்காட்சிகளில் ரஜினியை ஜெய்சங்கர் அடிக்கும்போது திரையரங்கில் ரசிகர்கள் பலரும் ஜெய்சங்கரை திட்டினார்களாம். அதே போல் வில்லனான ரஜினிகாந்த் ஜெய்சங்கரை அடிக்கும்போது ரசிகர்கள் உற்சாகமடைந்தார்களாம்.

இதையும் படிங்க: நிஜமாவே அஜித்தும் விஜய்யும்  ஃப்ரெண்ட்ஸ்தானா?… ஏன் இவுங்க ரெண்டு பேரும் இப்படி இருக்குறாங்க!!

Rajinikanth

Rajinikanth

எப்போதுமே ஹீரோக்களுக்குத்தானே ரசிகர்கள் இவ்வாறு செய்வார்கள், இது என்ன வில்லன் கதாப்பாத்திரத்தின் மீது இவ்வளவு ஈர்ப்பாக இருக்கிறார்களே என்று யோசித்தபோதுதான், அதற்கு காரணம் ரஜினிகாந்த் என தெரியவந்ததாம். ரஜினிகாந்த்திற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகி இருப்பதை உண்ரந்துகொண்ட பஞ்சு அருணாச்சலம், “இனி ரஜினியை வில்லனாக வைத்து படமெடுக்கக்கூடாது, இனி ரஜினிகாந்த் ஹீரோதான்” என முடிவு செய்தாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top