திரைக்கதை உத்தி இதுதான்....ரகசியத்தைப் போட்டு உடைத்த பொன்னியின் செல்வன் ஜெயமோகன்
பொன்னியின் செல்வன் கல்கி எழுதிய பிரமாண்டமான வரலாற்று நாவல். அந்த பிரம்மாண்டம் சற்றும் குறையாதவாறு மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவான படம் தான் பொன்னியின் செல்வன். இன்னும் சில தினங்களில் வெள்ளித்திரையில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.
இதுவரை நாவலைப் படிக்காதவர்கள் இந்தப் படத்தையாவது பாருங்கள். எவ்வளவு அற்புதமான கதை என்பது அப்போது தெரியும். இந்தப் பிரம்மாண்டமான படத்திற்கு மணிரத்னத்துடன் இணைந்து திரைக்கதை எழுதியவர் இளங்கோ குமாரவேல். வசனம் எழுதியவர் ஜெயமோகன். படத்தைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா...
பொன்னியின் செல்வன் எழுதப்பட்ட காலம் வந்து தமிழ்ல நாவல் தொடங்கிய காலம். 1880களில் இருந்து தான் தமிழில் நாவல்கள் எழுதப்பட்டன. மாயூரம் வேதநாயகம்பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம், ராஜாம்பாள் எழுதிய கமலாம்பாள் சரித்திரம், மாதவய்யா எழுதிய பத்மாவதி ஆகியவை தான் தொடக்கக்கால நாவல்கள் உள்ளன.
தொடர்ந்து 10.......15 ஆண்டுகள்ல சரவணமுத்துப்பிள்ளை என்பவர் எழுதிய மோகனாங்கி என்ற வரலாற்று நாவல். இது தான் தமிழில் எழுதப்பட்ட முதல் வரலாற்று நாவல். தொடர்ந்து சில ஆண்டுகளில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வந்துட்டு.
கல்கி எழுதி 70 ஆண்டுகாலம் தாண்டி விட்டோம். இன்னிக்கு சினிமா எடுக்கும்போது அந்தக்காலத்து நாவல தான் மாத்தணுமோ ஒழிய அதை அப்படியே எடுக்க முடியாது. சினிமா வேற மீடியா. இது கண் நோக்கு கலை. கண்ணால பார்க்கக்கூடிய கலை தான் சினிமா.
ஒரு கதைக்கு மைய ஓட்டம் உண்டு. மைய முடிச்சு அல்லது முதுகெலும்பு வேணும். இப்போ பொன்னியின் செல்வன் நாவலை எடுத்துக்கிட்டா வந்தியத்தேவன் கிளம்பி வர்றது. அவனுடைய ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம்.
கடம்ப மாளிகைக்குள்ள போறது. அதன்பிறகு அந்த சதிவேலையை;க் கண்டறியும்போது தான் படம் ஆரம்பிக்குது. மூவில அப்டி இருக்குமா? முடியாது. அப்படின்னா மூவில எடுத்த எடுப்பிலேயே முதல்ல கொண்டு வரணும்ல. அருண்மொழி எப்ப வாரான்? செகன்ட் ஆப். நாவல்ல இப்படித் தான்.
ஆனா சினிமாவுல இப்படி எடுக்க முடியுமா? ஒரு வால் விண்மீன் போன்றது தான் இது. சோழர் குலத்துல ஒருத்தரக் கொண்டு போது. அவர் யார் அப்படித் தான் ஆரம்பிக்குது படம். அப்படினா எல்லாருமே இன்ட்ரொடியூஸ் ஆகிருவாங்க. திரைக்கதை கிராமர் தெரிஞ்சவங்களுக்குத் தெரியும்.
திரைக்கதையில் 10....15 நிமிஷத்துக்குள்ள ரசிகனை உள்ள இழுத்துடும். மேஜரான எல்லா கேரக்டர்ஸையும் அதிகபட்சமா தமிழ்சினிமாவுல அரை மணி நேரத்துக்குள்ள உள்ளே கொண்டு வரணும். இனி யாரை ஃபாலோ பண்ணி படம் போகுதுன்னு தீர்மானிக்கணும். இது தான் திரைக்கதையோட உத்தி. இப்படித் தான் படம் பார்க்க வைக்கணும். இது நம்ம உருவாக்குன உத்தி அல்ல. உலகம் முழுக்க படம் பார்த்து படம் பார்த்து ஃபீடு பேக்ல அறிஞர்கள் உருவாக்குன உத்தி. இதை நம்ம மாத்தலாமான்னா முடியாது.
சின்ன படத்துல மாத்திப் பார்க்கலாம். மிஷ்கின் தைரியமா அதெல்லாம் பண்ணுவாரு. ஏன்னா சின்ன படத்துல அவரு அதெல்லாம் பண்ணுவாரு. பெரிய படத்தில வந்து எல்லாரையும் உட்கார வைக்கணும். இன்டர்நேஷனலா கிராமர் இப்படித்தான் அமையும். நந்தினி கேரக்டர் வந்து அழகி மட்டும் தான். கொல்லும் அழகி. கொல்லிப்பாவைன்னு சொல்வாங்க. அதுக்கு ஈசியா ஐஸ்வர்யா செட் ஆகிட்டாங்க.
கேமராங்கறது இயக்குனரோட கண் தான். பூங்குழலி கடல் தேவதை. கடலும் அவளோட ஏக்கமும் இதெல்லாம் சேர்ந்து படத்துல காட்டிருக்காங்க. சமுத்திர தேவதை. அதனால அவளை உள்ளே கொண்டு வந்த உடனே படம் லிங்க் ஆயிடுது. பழைய காலங்கள்ல வெற்றிகரமான நாடகங்களைத் தான் சினிமாவா எடுப்பாங்க. ஏன்னா எது ஒர்க் அவுட்டாகுதுங்கறது அப்ப தான் தெரியும்.