Connect with us

எப்படி இருக்கிறார் ரைட்டர்?

writter

Cinema News

எப்படி இருக்கிறார் ரைட்டர்?

வழக்கமான அண்ணன் தம்பி பாசம், போலீஸ் அத்துமீறல்கள், ஊழல், போலீசாருக்கு சங்கமை வைக்க கோரிக்கை – இவற்றின் ஒட்டு மொத்த கலவைதான் அண்மையில் திரைக்கு வந்துள்ள பா ரஞ்சித் தயாரித்து பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ள ரைட்டர் திரைபடம்தான்.

சமுத்திரக்கனி, காவல் துறையினருக்கு சங்கம் வேண்டும் என நினைக்கும் ஒரு ரைட்டர். அந்தப் பிரச்சினையின் காரணமாக அவர் வேலை பார்த்து வந்த திருவெறும்பூர் காவல் நிலையத்திலிருந்து சென்னை, திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறார். அங்கு அவருக்கு சீனியருக்குரிய மரியாதை தராமல் ‘பாரா’ டூட்டி போட்டுவிடுகிறார்கள். டி.சி உத்தரவின் பேரில் பி.ஹெச்டி படிக்கும் மாணவரான ஹரியை ஒரு லாட்ஜில் அடைத்து வைக்கிறார் திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர். அவர் மீது ஏதோ ஒரு காரணத்திற்காக ‘யுஎபிஏ’ வழக்கு போடுகிறார்கள். ஹரிக்கு சமுத்திரக்கனி உதவ நினைக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதிக் கதை. அதற்கேற்ற வகையில் காட்சிகளை ரசிக்கும்படிசெய்து உள்ளது பிரதீப் காளிராஜாவின் கேமரா.

writter

writter

எளிதில் ஊகிக்கக் கூடிய காட்சிகளாக இருந்தாலும் அதனை ரசிகர்களுக்கு போர் அடிக்காமல் படக்குழு கொண்டு செல்கிறது. சமுத்திரக்கனி. ரைட்டர் தங்கராஜாக அப்படியே தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார் படத்தில் கதாநாயகி என்று யாருமே கிடையாது. சமுத்திரக்கனி இரண்டாவது மனைவியாக மகேஸ்வரி. பிளாஷ்பேக்கில் குதிரை ரைடர் ஆக ஆசைப்பட்டு மேலதிகாரின் சாதி திமிரால் உயிரை விடும் பெண் போலீஸ் ஆக இனியா , டிசி ஆக கவின் ஜெய் பாபு , போஸ் வெங்கட். ஜி எம் சுந்தர், கவிதா பாரதி, திலீபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படம் விறுவிறுப்பாக தொய்வின்றி செல்வது கூடுதல் சிறப்பு. பாடல்கள் நினைவில் நிற்கவில்லை என்பது குறையே.

Venkatesan T S

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top