பிரபல பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்.... திரையுலகம் இரங்கல்...
by சிவா |
X
திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 65.
இவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படமான ‘ராசாத்தி ரோசாப்பூ’ என்கிற பாடல் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரைக்கும் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சுமார் 1500 பாடல்களை அவர் எழுதியுள்ளார். பாடல் எழுதுவது மட்டுமில்லாமல் கவிதைகளையும் அவர் எழுதி வந்தார்.
இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் தனது குடும்பத்தினருடன் அவர் பேசிக்கொண்டிருந்த போது அவர் மரணமடைந்துள்ளதாக முதல் கட்ட செய்திகள் வெளியாகியுள்ளது.
அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story