அந்நியன் படம் பார்த்த கமல் ஒய்.ஜி.மகேந்திரனிடம் சொன்ன ஆச்சரியமான விஷயம்...!
ஒய்.ஜி.மகேந்திரன் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர், நாடக நடிகர், எழுத்தாளர் என பன்முகத்திறன் கொண்டவர். பள்ளிப்பருவத்தில் இருந்தே நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.
தந்தையின் நாடகக்குழு யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்சில் இணைந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இது ஒரு பழமையான நாடகக் கம்பெனி. 70வது ஆண்டில் தமிழகத்தில் காலூன்றியது. 45 ஆண்டுகளாக தலைமை தாங்கி நடத்தி வருபவர் ஒய்.ஜி.மகேந்திரன்.
இவர் குரல் வித்தியாசமாக இருக்கும். அதாவது மூக்கால் பேசுவது போல இருக்கும். இதுவே இவருக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. இவர் நடித்த படங்களில் இவரது நகைச்சுவைக்கு இவரது குரல் ஒத்துழைப்புக் கொடுத்தது. இவருக்கு கிடைத்த நகைச்சுவை வேடங்கள் அனைத்தும் ரசிகர்களைக் கவரும் விதத்தில் அமைந்தன.
சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினி, கமல் என பல்வேறு காலகட்டங்களில் வந்த முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றார்.
அவர் தனது நாடக மற்றும் திரை உலக பயணங்களை இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்.
அப்பாவும், எழுத்தாளர் பட்டுவும் முதலில் சுகுணவிலாஸ் சபாவில் நாடகம் போட்டு நடித்தனர். அங்கு பம்மல் கே. சம்பந்த முதலியார் எல்லாம் அங்கு நாடகம் போட்டு நடித்துள்ளார். அப்போ அங்கு இவங்க எல்லாம் யங்ஸ்டர்ஸ். அவங்களுக்கு புதுமையா எதாவது செய்யணும்னு தோணுச்சு.
அதனால எங்க அப்பாவும், பட்டுவும் தனியாக வந்து யுஏஏ என்ற நாடகக்குழுவைத் தொடங்கினார்கள். இலக்கணத்தமிழில் இருந்து மாறுபட்டு வழக்கமான தமிழைப் பேசி நடிக்கத் தொடங்கினார்கள்.
ஜெயலலிதாவின் தாயார் சந்தியா இங்கு நடித்துள்ளார். நாகேஷ் இந்த நாடகக் குழுவில் நடித்துள்ளார். பத்மினி தங்கை ராகினி இங்கு நடித்துள்ளார். 61ல் எனது நாடக மேடை பிரவேசம். அப்போது எனக்கு 11 வயது. நான் பொறுப்பேற்றதும் நடிகை வைஷ்ணவி இங்கு நடித்தார். இவர் நடிகை சௌகார் ஜானகியின் பேத்தி.
ஸ்ரீகாந்த் என்னோட நடித்தார். அப்போது தான் இயக்குனர் பாலசந்தர் என்னை அறிமுகப்படுத்தினார். வியட்நாம் சுந்தரம் எங்களுக்கு எழுத்தாளராக வந்தார். அப்போது தான் மௌலி, விசு எல்லாம் எங்க குழுவில் பிரபலமானார்கள்.
கதையை நகைச்சுவை என்ற தேனுடன் கலந்து கொடுக்கிறோம். இதுதான் எங்க குழுவிற்கு வெற்றியைத் தேடித் தந்தது. கமலும் எங்க கம்பெனிக்கு நாடகம் பார்க்க வந்த கமலும் ஒரு சில நாடகங்களில் நடித்துள்ளார்.
1970களில் ஒய்.ஜி.மகேந்திரன் யுஏஏயின் முழு பொறுப்பையும் எடுத்து திறம்பட நடத்தினார். 67ல் தான் நான், மௌலி, விசு ஆகியோர் ஒன்றாக சேர்ந்து பெரிய ரோல் பண்ண ஆரம்பிச்சோம். நாலஞ்சு வருஷம் எங்களுக்கு பொற்காலம்னு சொல்லலாம். குருஷேத்ரம் வரை எங்க நாடகம் படு ஜோராக இருந்தது.
அப்புறம் விசு, மௌலி தனித்தனியாக ட்ரூப் ஆரம்பித்து நடிக்கத் தொடங்கினார்கள். 75ல இருந்து இன்று வரை நான் தான் டைரக்ட் பண்ணி ட்ராமா நடத்துறேன். எங்க அப்பா இருந்தப்ப கூட நான் தான் அவரை டைரக்ட் பண்ணினேன். மத்தவங்களுக்கு என்ன டோஸ் விடுவனோ அதை அவரும் வாங்கிக்குவாரு.
61ல ருந்து நீங்க பார்த்தீங்கன்னா வருஷத்துக்கு ஒரு டிராமா போட்டுருவோம். நானே கிட்டத்தட்ட 60 டிராமாக்கு மேல போட்டுருக்கேன். 1952 முதல் இன்று வரை நாடகம் போட்டுக்கொண்டு இருக்கிறோம்.
வரும் நவம்பரில் கூட சாருகேசிங்கற நாடகத்தைப் போடறோம். ஒரு காலகட்டத்தில நடிகர் ராதாரவி எங்க கூடநடிச்சிருக்காரு. ரூபாய்க்கு மூணு கொலைங்கற நாடகம். இதுதான் அந்நியன் படத்தின் கதைக்கு முன்னோடியானது. நான் ஸ்டேஜ்லயே டபுள் ரோல் பண்ணியிருக்கேன். ஸ்பிலிட் பெர்சனாலிட்டி.
இந்த நாடகம் போட்ட நேரம் அந்நியன் படம் பார்த்துட்டு கமல் எங்கிட்ட போன் பண்ணி சொன்னாரு. ஏ...ஹேய்...அந்நிiயைன் படம் போய் பாரு. உன் ரூபாய்க்கு மூணு கொலை ஸ்டைல்லயே இருக்குன்னாரு.