ஊர் கண்ணு வச்சிரும்.. அதனால் ‘அந்த’ விஷயம் மட்டும் வேணாம்.. உதயநிதியின் யானை மனசு.!

Published on: June 26, 2022
---Advertisement---

ஒரு காலத்தில் கமெர்சியல் ஆக்சன் படங்களின் கிங் என பெயர் எடுத்த இயக்குனர் ஹரி. சாமி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பிறகு மீண்டும் ஒரு கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

தற்போது ஹரி அவரது மச்சான் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து யானை படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படத்தை அருண் விஜயின் உறவினர் தான் தயாரித்துள்ளாராம். இந்த திரைப்படம் ஜூன் 17ஆம் தேதி வெளியாக வேண்டியது.

ஆனால் சில காரணங்களால் படம் ரிலீசாக வில்லை. விக்ரம் திரைப்படத்தின் பெரிய ஹிட் தான் இந்த படம் ரிலீஸ் அக்காததற்கு காரணம் என கூறப்பட்டாலும், உண்மையான காரணம் வேறு ஒன்றாம்.

படத்தினை ஒரு நிறுவனம் தமிழகம் முழுவதும் தியேட்டரில் ரிலீஸ் செய்யும் உரிமையை வாங்கியதாம். ஆனால் அந்த நிறுவனம் சரியாக அனுபவம் இல்லாத காரணாத்தால், இப்படத்தை வாங்கி அனைத்து ஏரியாக்களிலும் விற்க முடியாமல் போனதால் தான் ஜூலை 1ஆம் தேதி ரிலீஸ் மாற்றப்பட்டதாம்.

இதையும் படியுங்களேன்  – உனக்கு சம்பளம் ஒரு கேடா.?! அசிங்கப்பட்ட பிரபுதேவா.! வித்தியாசமான பழிக்கு பழி சம்பவம்…

தற்போது இப்படத்தின் ரிலீஸ் மேற்பார்வையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் பார்கிறதாம். மேலும் முக்கியமான 3 ஏரியாக்களை வாங்கிவிட்டதாம் ரெட் ஜெயண்ட். இருந்தும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெயர் போட்டுக்கொள்ள வேண்டாம் என கூறிவிட்டனராம்.

இதனை அறிந்த சினிமாவாசிகள் இருக்கும் அனைத்து படங்களிலும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெயர் இருந்தால் மக்கள் கண்ணு வச்சிருவாங்க போல அதனால தான் ரெட் ஜெயண்ட் யானை படத்தில் தங்கள் பெயரை போட்டு கொள்ளவில்லை என சிலாகித்து வருகின்றனர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.