‘எஜமான்’ படத்தால என் வாழ்க்கையே பாழா போயிருக்கும்! நல்லவேளை - பெருமூச்சு விட்ட நெப்போலியன்
தமிழ்திரையுலகில் வில்லனாக மிகவும் இள வயதில் முதியவர் வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் நெப்போலியன். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஒப்பற்ற கலைஞன். கிராமத்து மண்வாசனையை தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்துபவர் நெப்போலியன்.
அதுவும் குறிப்பாக கிழக்குச் சீமையிலே படத்தில் அட்டகாசமான நடிப்பால் அனைவரையும் பிரமிக்க வைத்தவர்.எட்டுப்பட்டி ராசா படத்தில் குஷ்பூ மற்றும் ஊர்வசிக்கு நாயகனாக நடித்ததோடு மட்டுமில்லாமல் கட்டுக்கடங்காத ஒருவன் தன் மனைவி இறப்பிற்கு பின் எப்படி உருக்குலைந்து போகிறான் என்ற கதாபாத்திரத்தில் கண்கலங்க வைத்திருப்பார்.
அவரின் சினிமா வாழ்க்கையில் நெப்போலியனுக்கு மிகவும் திருப்பு முனையாக அமைந்த படம் ‘எஜமான்’. இந்தப் படத்தில் ரஜினிக்கு சவால் விடும் விதமான கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருப்பார். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ரஜினி ரசிகர்களுக்கு நிஜ வில்லனாகவே மாறினார் நெப்போலியன். அந்த அளவுக்கு அசத்தியிருப்பார்.
இந்த நிலையில் எஜமான் படத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறுகையில் அந்த சமயத்தில் தான் நெப்போலியனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்களாம். அப்போது பெண் பார்க்கும் படலம் அரங்கேறியிருக்கிறது. அவர் மனைவி ஏற்கெனவே திருமணம் என்றாலே கொஞ்சம் யோசித்தாராம்.
இருந்தாலும் அவர் வீட்டில் சம்மதிக்க வைத்திருக்கிறார்கள். ஆனாலும் மாப்பிள்ளை யார் என்று அவர் மனைவி கேட்க ‘அவர் ஒரு சினிமா நடிகர் என்றும் நெப்போலியன் அவர் பெயர்’ என்றும் கூறியிருக்கிறார்கள். நெப்போலியன் என்ற பெயரை கேட்டதும் அவர் மனைவி ஜெய சுதா ‘ஐய்யயோ எஜமான் படத்தில் கருவில் இருக்கும் குழந்தையை அழிக்க நினைத்தவன் கூட என்னை வாழச் சொல்றீங்களா?’ என்று வேண்டவே வேண்டாம் என சொல்லியிருக்கிறார். இருந்தாலும் அவரது வீட்டில் ‘ம்மா நல்ல பையன் தான், வெளியில் நெப்போலியனை பற்றி விசாரித்து விட்டோம், ஒன்றும் பயப்பட வேண்டாம்’ என்று சொன்னபிறகே சம்மதித்தாராம்.
இதையும் படிங்க :ஆர்வக்கோளாறில் பாட்டு எழுதிய வாலி!.. ‘அக்கிரமம்’ என திட்டிய எம்.ஜி.ஆர்.. அட அந்த பாட்டா?..