எஜமான் படத்தை ஓடவைத்த ரசிகையின் கடிதம்!.. ரஜினி படத்துக்கே இப்படியா?!...
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி. ஆனால், இவரின் நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறாமல் போயிருக்கிறது. அதற்கு சில விஷயங்கள் காரணமாக இருந்திருக்கிறது. ரஜினிக்கு ஒரு பழக்கம் உண்டு. அவரின் படம் வெளியாகும் போது வேறு ஒரு நடிகரின் படம் வெளியாகி அவரின் படத்தை விட அதிக வசூலை பெற்றால் அந்த படத்தை பார்ப்பார்.
நம் படத்தை விட இந்த படம் எவ்வளவு சிறப்பா இருக்கு?.. ரசிகர் கூட்டம் ஏன் அதிகமாக போகிறது? என யோசிப்பார். இதுபற்றி அவருக்கு தெரிந்தவர்களிடம் ஆலோசனை செய்வார். அவரின் ‘பேட்ட’ படம் வெளியான போது அஜித்தின் ‘விஸ்வாசம்’ படம் வெளியாகி பேட்ட படத்தை விட அதிக வசூலை பெற்றது. அந்த படத்தை பார்த்தார் ரஜினி.
இதையும் படிங்க: ரஜினி கமலைத் தாண்டி பாலசந்தருக்கு பிடித்த நடிகர்! இவர யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க
அதேபோல், ரஜினிக்கு இன்னொரு பழக்கமும் உண்டு. அப்படி தன்னுடைய படங்களை தாண்டி வசூல் செய்த படங்களை இயக்கிய இயக்குனரை அழைத்து தனக்கொரு கதையை உருவாக்கி சொல்லி அதில் நடிப்பார். அப்படித்தான் விஸ்வாசம் பட இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்தார்.
கமல் வேட்டி கட்டி நடித்து தேவர் மகன் ஹிட் கொடுத்தார். விஜயகாந்த் வேட்டி கட்டி சின்னக்கவுண்டர் படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். உடனே தானும் அப்படி ஒரு படம் நடிக்கவேண்டும் என ஆசைப்பட்ட ரஜினி ஆர்.வி.உதயகுமாரை அழைத்து தனக்கும் ஒரு கிராமத்து கதையை உருவாக்க சொன்னார். அப்படி உருவான திரைப்படம்தான் ‘எஜமான்’. இப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது.
இதையும் படிங்க: ரஜினியும் கமலும் சிவாஜிக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா? எப்பவுமே கெத்து சூப்பர்ஸ்டார்தான்..!
ஆனால், இந்த படம் வெளியாகி ரஜினி ரசிகர்களையே திருப்தி படுத்தவில்லை. எனவே, எதிர்பார்த்த வசூல் இல்லை. அப்போதுதான் ‘வானவராயன் போல ஒரு மாப்பிள்ளை கிடைத்தால் நானும் திருமணம் செய்து கொள்வேன்’ என குறிப்பிட்டு இந்த படத்தை பாராட்டி ஒரு பெண் ஏவிஎம் நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதினார்.
இதை வைத்தே படத்திற்கு விளம்பரம் செய்யலாம் என கணக்குப்போட்ட ஏவிஎம் சரவணன் அந்த பெண்ணின் அனுமதி பெற்று அவரின் புகைப்படத்துடன் அந்த கடிதத்தையும் போட்டு செய்தி தாள்களில் விளம்பரம் செய்தார். அதன்பின் பல பெண்களும் அதுபோல கடிதம் எழுத எல்லா கடிதங்களையும் விளம்பரத்திற்கு பயன்படுத்தியது ஏவிஎம். அதன்பின் ஓரளவுக்கு கூட்டம் வந்து எஜமான் படம் வசூலை பெற்றது.