Toxic யாஷ் இத்தனை ரீமேக் படங்களில் நடித்திருக்கிறாரா?

X
Toxic யாஷ் இத்தனை ரீமேக் படங்களில் நடித்திருக்கிறாரா?

‘கே.ஜி.எஃப்’ புகழ் யாஷ் நடித்துள்ள புது படமான ‘டாக்ஸிக்’ கடந்த வாரம் தான் ரிலீஸ் ஆனது. கே.ஜி.எஃப் போல் எதிர்பார்த்து திரையரங்கு போன ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

யாஷ் ‘கே.ஜி.எஃப்’-க்கு முன்னாடி பல கன்னட படங்களில் நடித்திருக்கிறார். இதில் ஒரு மூன்று படங்கள், ஆல்ரெடி தமிழில் வெளி வந்த படங்களின் ரீமேக் தான். அதன் லிஸ்ட் இதோ…

களவாணி :

சற்குணம் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் ‘களவாணி’. விமல், ஓவியா ஜோடியாக நடித்து வெற்றி பெற்ற இப்படத்தின் கன்னட ரீமேக் ‘கிராடகா’ என்ற பெயரில் 2011-ஆம் ஆண்டு வெளியானது.

சுந்தரபாண்டியன் :

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் ‘சுந்தரபாண்டியன்’. சசிகுமார், லக்ஷ்மி மேனன் ஜோடியாக நடித்து வெற்றி பெற்ற இப்படத்தின் கன்னட ரீமேக் ‘ராஜா ஹோலி’ என்ற பெயரில் 2013-ஆம் ஆண்டு வெளியானது.

வாலு :

விஜய் சந்தர் இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் ‘வாலு’. சிலம்பரசன், ஹன்ஷிகா மோத்வானி ஜோடியாக நடித்த இப்படத்தின் கன்னட ரீமேக் ‘சந்து ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்’ என்ற பெயரில் 2016-ஆம் ஆண்டு வெளியானது.