ஆறாம் வகுப்புலேயே இம்புட்டு திறமையா? யாஷிகா ஆனந்த்தோட கிளாமருக்கு என்ன காரணம்னு இப்போ தெரியுதா?!

by sankaran v |   ( Updated:2023-02-20 17:09:53  )
ஆறாம் வகுப்புலேயே இம்புட்டு திறமையா? யாஷிகா ஆனந்த்தோட கிளாமருக்கு என்ன காரணம்னு இப்போ தெரியுதா?!
X

Yashika Anand

சில நடிகைகளைப் பார்த்தாலே ஜிவ்வுன்னு ஒரு கிக் ஏறும். சில நடிகைகளைப் பார்த்தா குடும்ப குத்துவிளக்காட்டம் இருப்பாங்க.

ஆனா இந்த ரெண்டு அம்சமும் இருக்குறவங்க ரொம்பவே கம்மி தான். அவங்கள்ல ஒருத்தர் தான் நாம இப்போ பார்க்கப் போற யாஷிகா ஆனந்த். என்ன ரெடியா...வாங்க பார்க்கலாம்.

யாஷிகா 4.8.1999ல் டெல்லியில் பிறந்தவர். இவர் ஒரு பஞ்சாபி பொண்ணு. சினிமாவில் சாதிக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு ஒரு முன்னணி நடிகரையோ அல்லது நடிகையையோ பார்த்து ஆசை வரும்.

ஆனால் இவருக்கோ ஒரு ஆன்டியைப் பார்த்ததும் அந்த ஆசை வந்துருக்கு. இவரது வீட்டிற்கு அடிக்கடி அவங்க வருவாங்களாம்.

Yaashika 1

அவங்க எப்படி எல்லாம் பேசுறாங்க..நடக்குறாங்கன்னு பார்த்துக்கிட்டு ஸ்கூல்ல போனதும் அவரே மாதிரி இமிடேட் பண்ணுவாராம். அதைப் பார்த்ததும் அவங்க பிரண்ட்ஸ் எல்லாம் ஜாலியா ஆயிடுவாங்களாம்.

அப்போ தான் யாஷிகா நினைச்சிருக்காங்க...நாம ஏன் என்டர்டெயின்ட் பீல்டுல போகக்கூடாது. மக்களை ஜாலியா வைச்சிருக்கலாமேன்னு யோசிச்சாங்களாம்.

Yashika Aanand

அதனால இவங்க மாடலிங் துறைக்குள் நுழைந்தார். 9ம் வகுப்பு படிக்கும்போதே மாடலிங் பண்ணிருக்காங்க. அந்த சமயத்துல தான் இவங்களுக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தில் இருந்து ஒரு விளம்பர வாய்ப்பு தேடி வந்துருக்கு. அதைச் சரியா பயன்படுத்திய இவருக்குத் தமிழ்சினிமாவுல நடிக்குறதுக்கு வாய்ப்பு கிடைச்சது.

2015ல் சந்தானம் நடிப்பில் வெளியான இனிமே இப்படித் தான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ஆனால் அப்போ 10ம் வகுப்பு படிச்சதனால இவருக்கு நடிக்க முடியாமப் போச்சு. ஆனால் அடுத்த வாய்ப்பு 11ம் வகுப்பு படிக்கும்போது கிடைச்சது.

Yashika2

கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான துருவங்கள் 16 படத்தில் இவருக்கு வயசு 16 தான். இந்தப் படத்துலயே எல்லோரையும் கவரும் விதத்தில் இவரோட நடிப்பு இருந்தது. அடுத்ததாக இவர் இருட்டறையில் முரட்டு குத்து படத்தில் நடிச்சாங்க. இது இவருக்கு சர்ச்சையைக் கிளப்பிடுச்சு.

YA

அதே நேரம் ரசிகர் பட்டாளம் அதிகமாகவும் ஆனது. அதுக்கு அப்புறம் ஒரே கிளாமர் தான். போட்டோஸ், வீடியோஸ் என ரசிகர்களைக் கிறங்க அடிச்சாங்க. கராத்தேல இவங்க பிளாக் பெல்ட். ஆனா 6ம் வகுப்பு படிக்கும்போதே புல்லட் ஓட்டக் கத்துக்கிட்டாங்களாம். அடேங்கப்பா...என்ன ஒரு டேலன்ட்னு பார்த்தீங்களா...

Yashika with Bullet

பிக்பாஸ் சீசன் 2ல இவங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய ரசிகர்களோட மனசுல இடம்பிடிச்சிட்டாங்க... தொடர்ந்து நிறைய பட வாய்ப்பும் கிடைச்சது. இவரும் ஐஸ்வர்யா தத்தாவும் க்ளோஸ் பிரண்ட்ஸ் ஆனாங்க. நான் போடுற ட்ரஸ்ச வச்சித் தான் என் கேரக்டரைப் பேசுறீங்க.

YA3

ஆனா நான் எப்படின்னு எனக்குத் தெரியும். எல்லாருமே பார்க்குறவங்களப் பொருத்துத் தான் இருக்கு. நான் மாடர்ன் ட்ரஸ் போடுறதுன்னாலே தப்பாப் பேசுறீங்க...சேரி கட்டினேனா குடும்ப குத்துவிளக்குன்னு சொல்வீங்க...எனக்கு அப்படி ஒரு பாராட்டு தேவையே இல்ல.

ஏன்னா வளர்ந்து வந்ததுக்கு அப்புறம் நீங்க எப்படி பேசுவீங்கன்னா...அப்போ அப்படித் தானே இருந்த...ன்னு சொல்வீங்க.. அதனால நான் இப்படித் தான் இருப்பேன். என்னோட ரசிகர்களை என்டர்டெயின்ட் பண்ணிக்கிட்டே தான் இருப்பேன். இவருக்கு பிரியங்கா சோப்ரா மாதிரி வரணும்னு ஆசை இருக்காம்.

அதனால தான் இவ்ளோ ஹார்டு ஒர்க்குன்னும் சொல்றாங்க. தமிழ்ல கவலை வேண்டாம், மணியார் குடும்பம், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, நோட்டா, கழுகு 2 என சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் ரசிகர்களுக்கு மட்டும் தவறாமல் கவர்ச்சிக்கு மட்டும் தவறாமல் கவர்ச்சி விருந்து படைக்கிறார்.

யாஷிகா ஆனந்த்தோட கிளாமருக்கு என்ன காரணம்னு இப்போ தெரிஞ்சுக்கிட்டீங்களா...!

Next Story