அஜித்திற்கு உறவினராக ஆகப்போகிறார் யாஷிகா? இணையத்தில் வெளியான புகைப்படங்கள்!
யாஷிகா ஆனந்த் தற்போது இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். “துருவங்கள் பதினாறு”, “இருட்டு அறையில் முரட்டு குத்து”, “நோட்டா”, “ஜாம்பி” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த் தற்போது “இவன்தான் உத்தமன்”, “பாம்பாட்டம்”, “சல்ஃபர்” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் யாஷிகா ஆனந்தும் அஜித் மனைவி ஷாலினியின் தம்பியான ரிச்சார்ட் ரிஷியும் நெருக்கமாக பழகி வருவதாக இணையத்தில் வெளியான புகைப்படங்கள் மூலம் தெரிய வருகிறது.
ஷாலினியின் தம்பியான ரிச்சார்ட் ரிஷி சிறு வயதில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாளம், தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் பல ஆண்டுகளாக நடித்து வரும் ரிச்சார்ட் சமீபத்தில் மோகன் ஜியின் “திரௌபதி”, “ருத்ர தாண்டவம்” ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் யாஷிகா ஆனந்துடன் நெருக்கமாக இருக்கும் வகையில் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரிச்சர்ட். சில நாட்களாகவே இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்களில் யாஷிகா ஆனந்த் ரிச்சார்டுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் “அஜித்துக்கு யாஷிகா உறவினர் ஆகப்போகிறார்”, “இருவரும் எப்போ கல்யாணம் செஞ்சிக்க போறீங்க?” போன்ற கம்மெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
எனினும் இருவரும் தங்களது காதலை குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. ஆதலால் இருவரும் காதலிக்கிறார்களா? அல்லது நட்பாக பழகி வருகிறார்களா? என்பது குறித்த உண்மையான தகவல் இதுவரை தெரியவில்லை என்பதுதான் நிதர்சனம்.
இதையும் படிங்க: விஜயகாந்துடன் நடிக்க மறுத்த டாப் நடிகைகள்!.. சொன்ன காரணம்தான் ஹைலைட்!..