Yashika: சினிமாவிலும் பெரிய வாய்ப்புகள் கிடைத்து முன்னணி நடிகையாக ஆகவில்லை என்றாலும் கடந்த பல வருடங்களாக சின்ன சின்ன படங்களில் நடிப்பதோடு சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்தான் இந்த யாஷிகா ஆனந்த்.

Also Read
இவர் டெல்லியை சேர்ந்தவர். பிறந்து வளந்தது எல்லாம் டெல்லியில்தான். கல்லூரி படிப்புக்கு பின் மாடலிங் துறையிலும் சினிமாவில் நடிப்பதிலும் ஆர்வம் வர அதில் நுழைய முயன்றார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, இன்ஸ்டாகிரமில் அழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ நெட்டிசன்களுக்கு கவர்ச்சி விருந்து கிடைத்தது. அவரின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் உருவானது. அப்படியே திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களும் கிடைத்தது. இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் தூக்கலான கவர்ச்சி காட்டியும் நடித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அதன்பின் ஒரு கார் விபத்தில் சிக்கி 6 மாதங்களுக்கும் மேல் படுக்கையில் கிடந்தார். அதன்பின் அதிலிருந்து மீண்டு மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தார். சில படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடி வருகிறார்.

இந்நிலையில், ஜிகுஜிவென மின்னும் உடையில் கட்டழகை தூக்கலாக காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஜொள்ளு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்த புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.




