எத்தனை பேர் வந்தா என்ன! ஹாட்டுக்கு நீதான் ஹைலைட்டு...உருக வைத்த யாஷிகா.....
கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு படத்தில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். பின் நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடந்த ஜூலை மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த கார் விபத்தில் சிக்கினார். பழைய மகாபலிபுரம் அருகே அவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மீதி விபத்து ஏற்பட்டது.
இதில், அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் தற்போது வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
கைப்பிடி உதவியுடன் நடக்க பழகி வந்த அவர் தற்போது எழுந்து நிற்கிறார். கொஞ்சம் நடக்கவும் செய்கிறார். திடீரென பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில், மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார். தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.