Categories: latest news

ஒரு அடி கூட நடக்க முடியாத நிலையில் யாஷிகா ஆனந்த்… அதிர்ச்சி வீடியோ…

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த ஜூலை மாதம் நடந்த கார் விபத்தில் சிக்கினர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்ற போது பழைய மகாபலிபுரம் அருகே அவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மீதி விபத்து ஏற்பட்டது.

இதில், அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் தற்போது வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.கடந்த 95 நாட்களாக அவர் படுத்த படுக்கையில்தான் இருக்கிறார்.

இந்நிலையில், மருத்துவர்கள் உதவியுடன் அவர் நடக்க முயற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ‘குழந்தை போல் நடக்க முயல்கிறேன். 95 நாட்களான என் நம்பிக்கை. பிராத்தனைகளும், வலிமையும் இதை நனவாக்கும். எந்த உதவியும் இல்லாமல் விரைவில் நடப்பேன் என நம்புகிறேன். என்னை அக்கறையாக பார்த்துக்கொள்ளும் மருத்துவர்களுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

 

Published by
சிவா