திடீரென கார் விபத்து நடந்த இடத்திற்கு சென்ற யாஷிகா- எதற்கு தெரியுமா?
ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம் கவலை வேண்டாம் இப்படத்தில் சும்மிங் கோச்சாக சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். சில நிமிடங்களே வந்தாலும் ஏடாகூடமான காட்சியில் நடித்து அசத்தியிருப்பார். இதையடுத்து துருவங்கள் 16 படத்திலும் நடித்திருந்தார்.
ஆனால் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு நடிகை ஐஸ்வர்யா தத்தாவுடன் சேர்ந்து இவர் அடித்த கூத்துக்கள் மக்களிடம் இவரை கொண்டுபோய் சேர்த்தது. முதல் படத்தையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து இளம் ரசிகர்களை கவர்ந்தார்.
தொடர்ந்து ஜாம்பி, நோட்டா ஆகிய படங்களில் படம் முழுவதும் பயணிக்கும் படியான நல்ல கேரக்டரில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கிய இவர் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது பூரண குணமடைந்துள்ளதால், மீண்டும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக உள்ளார். இந்த விபத்தில் இவரது உயிர் தோழி சம்பவ இடத்திலேயா உயிரிழந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் யாஷிகா ஆனந்த் கார் விபத்து நடந்த இடத்திற்கு சென்றார். அங்கு அவர தனது தோழியை நினைத்து கண்ணீர் விட்டு அழுதார். பினன்ர் தன்னை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கி நன்றி கூறினார்.