நீங்க கற்ப்போட தான் இருக்கீங்களா? இளம் நடிகையிடம் கேட்ட ரசிகர்.... அவர் என்ன பதில் கூறியுள்ளார் தெரியுமா?
அடல்ட் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மேலும் பிரபலமானார். இதுதவிர அந்த சீசனில் இவருடன் பங்கேற்ற சக போட்டியாளரான நடிகர் மகத்தை யாஷிகா காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய யாஷிகா ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து ஒன்றில் சிக்கிய யாஷிகா படுகாயமடைந்தார். மேலும் அந்த விபத்தில் யாஷிகாவின் தோழி ஒருவர் மரணமடைந்தார்.
இந்த விபத்தில் இடுப்பெலும்பு உடைந்த யாஷிகா எழுந்து நடக்கவே பல மாதங்கள் ஆனது. இந்நிலையில் தான் முழுமையாக குணமடைந்த யாஷிகா மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கிடையில் அவ்வபோது சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் யாஷிகா உரையாடி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்வி பதிலளித்து வந்த யாஷிகாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் வெர்ஜினா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த யாஷிகா "இல்லை, நான் யாஷிகா" என்று கேலியாகவும் இரட்டை அர்த்தத்திலும் பதில் அளித்துள்ளார்.
இதில் நோ என்று யாஷிகா சொன்னது தான் ரசிகரின் அந்த கேள்விக்கான பதிலா என்று தெரியவில்லை. ஆனால் திரைபிரபலங்கள் பலரிடம் அவ்வபோது ரசிகர்கள் இதுபோன்ற மிகவும் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்டு வருகிறார்கள். இது பலருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.