Connect with us
rajinikanth

Cinema History

கதையை கேட்டு கடுப்பான ரஜினிகாந்த்… அப்புறம் எப்படி ஹிட் ஆச்சு தெரியுமா?.. அட அந்த படமா?!..

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் 16 வயதினிலே, முள்ளும் மலரும், அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

ஆரம்பத்தில் இவரது படங்கள் பெரிய அளவில் வெற்றி அடையாவிட்டாலும் முத்து, எஜமான் போன்ர திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார். பின் சந்திரமுகி, எந்திரன் போன்ற பெரிய பட்ஜெட் படக்கலின் மூலமும் வெற்றி அடைந்தார்.

இதையும் படிங்க:உன்னால புரொடியூசர் நஷ்டம் ஆகணுமா?… வெண்ணிறாடை நிர்மலாவிற்கு கண்டிஷன் போட்ட எம்.ஜி.ஆர்…

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம்தான் ஜெயிலர். இப்படம் இவருக்கு வரலாறு காணாத வெற்றியை தந்தது. மேலும் இவர் தனது அடுத்த படங்களிலும் நடிக்க தயாராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிப்பில் 1993ஆம் ஆண்டு வேளியான படம்தான் எஜமான். இப்படத்தினை ஆர்.வி.உதயகுமார் இயக்கினார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் கவுண்டமணி, செந்தில் போன்ற காமெடி நடிகர்களும் நடித்திருந்தனர். இப்படம் மிக பெரிய அளவில் வெற்றியடைந்தது.

இதையும் படிங்க:கமலுக்கே அல்வா கொடுக்க நினைத்த இயக்குனர்! விஷயம் தெரிஞ்சி வாழ்நாள் தண்டனையை கொடுத்த ஆண்டவர்..

விஜயகாந்த் நடிப்பில் வெளியான சின்னகவுண்டர் திரைப்படத்தினை பார்த்து ரஜினிகாந்த் அதைபோல படம் வேண்டும் என கேட்டுள்ளார். அவ்வாறு உருவான படம்தான் எஜமான். இப்படத்தில் மீனா தான் கருவுற்றிருப்பதாக ரஜினியிடம் பொய் கூறியிருப்பார். ரஜினியின் மகிழ்ச்சி கெட்டு விட கூடாது என்பதர்காக அவரிடம் அந்த விஷயத்தை மறைத்து இறுதியில் தானே இறந்துவிடுவார்.

படம் முழுவதும் முடிந்த பின் ரஜினிக்கு அக்கதை பிடிக்கவில்லையாம். என்னை படத்தில் ஏமாற்றுகிறார்கள். ஆனால் நான் எமாறுவதை என் ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள் என ரஜினி கோபத்தில் இருந்துள்ளார். ஆனாலும் இப்படம் பெரிய வெற்றியை சந்தித்தது.

இதையும் படிங்க:சிவகார்த்திகேயன் மிரண்டதற்கு காரணம் இந்த நடிகரா?!… ஓஹோ அதான் அங்க தாவிட்டாரா?…

இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் நிறுவனம் இக்கதையின் நேர்மறையான கருத்துகளை மட்டும் பத்திரிக்கைகளில் வெளியிட்டனர். மேலும் இப்படத்தில் வரும் காமெடிகளையும் மையப்படுத்தி விளம்பரப்படுத்தினர். இதுவே இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் இப்படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

google news
Continue Reading

More in Cinema History

To Top