ஆமா கல்யாண வாழ்க்கை சலித்துவிட்டது…ஓபனாக கூறிய சினேகா.. என்ன பிரச்னை தெரியுமா?
Sneha: நடிகை சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்கள் திருமண வாழ்க்கை தற்போது சலிப்பு தட்டிவிட்டதாக ஒரு பேட்டியில் சினேகாவே ஓபனாக சொல்லி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் இணைந்து அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தனர். அப்போதில் இருந்தே இருவரும் பல இடங்களில் ஒன்றாக காணப்பட்டனர். ஒருக்கட்டத்தில் 2011 ஆண்டு சினேகாவை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்தார். இதை தொடர்ந்து, 2012ம் ஆண்டு இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
இதையும் படிங்க: மணிரத்னத்தை இப்படியா அவமானப்படுத்துறது? ‘ரோஜா’ படத்தில் இளையராஜா காட்டிய ஆட்டியூட்!
12 வருடங்களை கடந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் தன்னுடைய திருமண வாழ்க்கையில் சலிப்பு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அப்பேட்டியில் இருந்து, திருமண வாழ்க்கையில் நாங்கள் சலித்துவிட்டோம். சண்டை போடாமல் நாங்கள் இல்லை. டாம் அண்ட் ஜெர்ரி போல சண்டை போடுவோம். ஆனால், சண்டை முடிந்தவுடன் பேசி புரிந்து கொள்ள வேண்டும். புரியவில்லை என்றாலும் அடித்து புரிந்துக்கொள்ளுங்கள்.
என்ன செய்தாலும் அந்த புரிதல் தான் முக்கியம். அது இருந்தாலே திருமண வாழ்க்கை பாதி வெற்றி பெற்றுவிடும். சண்டை வந்தால் டேட்டிங் செல்வோம். குழந்தைகளுடன் தான் எங்கு சென்றாலும் செல்லும் வழக்கம் என்னுடையது. எல்லா விஷயங்களை இரண்டு பேரும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்துவிட்டால் பல பிரச்சனைகள் நீங்கும்.
இதையும் படிங்க: அவங்களாம் இல்ல.. புது ’தக்’ இவரு தான்.. புதிய அறிவிப்பை வெளிட்ட தக் லைஃப் படக்குழு!…
ஆரம்பத்தில் பிரசன்னா போன் செய்து என்னிடம் விஷயங்களை பேசும் வரைக்கும் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்படாமல் தான் இருக்கும். இது நம்பிக்கையின்மை என்பதற்காக அல்ல. இருவருக்கும் இருக்கும் காதல் தான் காரணம். நாம் முக்கிமானவர்கள் என்று இன்னொருவர் நினைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து கொண்டு இருந்தோம். அதுதான் எங்க சண்டைக்கு முக்கிய காரணம் என்று சினேகா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.