Cinema History
உங்கள விட சிறப்பா நான் பாட போறதில்ல.. பாட மறுத்த யேசுதாஸ்!.. மனதை உருக்கும் அந்த பாட்டா?!..
layaraja: இளையராஜாவின் இசையில் பல இனிமையான பாடல்களை பாடியவர் கே.ஜே. யேசுதாஸ். கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழை அழகாக உச்சரித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாடகர். மனதை மயக்கும் அற்புதமான, ரம்மியமான குரலுக்கு சொந்தக்காரர். இப்போதும் 70,80 கிட்ஸ்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இவரின் பாடல்கள் இருக்கிறது.
இசைஞானி இசையில் இவர் பாடிய பாடல்கள் தேவகானம்தான். காதலின் வலியை, சோகத்தை, கண்ணீரை, விரக்தியை யேசுதாஸ் போல யாரும் பாடியதில்லை என்றுதான் சொல்லவேண்டும். பல டூயட் பாடல்களை யேசுதாஸ் பாடியிருந்தாலும் ரசிகர்களுக்கு ஃபேவரைட் இவர் பாடிய சோக பாடல்கள்தான்.
இதையும் படிங்க: பயில்வான் காலில் விழுந்த இசைஞானி இளையராஜா!… அதை செய்ய வைத்த பிரபலம்!.
பூவே பூச்சூடவா, சின்ன சின்ன ரோஜாப்பூவே, தென்றல் வந்து என்னை தொடும், ராஜராஜ சோழன் நான் என இவர் பாடிய பல பாடல்கள் எவர் கிரீன்தான். பொதுவாக இளையராஜா ஒரு பாடலை கம்போஸ் செய்து முடித்ததும் யார் பாடினால் சரியாக இருக்கும் என யோசித்து அந்த பாடகருக்கு அழைப்பு போகும்.
அந்த பாடகர் வரவில்லை என்றால் வேறு பாடகருக்கு போகும். இப்படி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வேண்டிய பல பாடல்களை மலேசியா வாசுதேவனும், மனோவும் பாடியிருக்கிறார்கள். இதை அவர்களே பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்கள். யேசுதாஸ் பாடிய பல பாடல்களை ‘ஏன் எனக்கு கொடுக்கவில்லை?’ என இளையராஜாவிடம் எஸ்.பி.பி. சண்டை போட்ட சம்பவமெல்லாம் பலமுறை நடந்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் 80களுக்கு அழைத்துச் செல்லும் இளையராஜா…… இது எந்தப் படத்தில் தெரியுமா?
ஒருமுறை ஒரு பாடலை யேசுதாஸ் பாடினால் சரியாக இருக்கும் என நினைத்த இளையராஜா அவருக்காக காத்திருந்தார். ஆனால், அவர் வர தாமதமானதால் இளையராஜாவே டிராக் பாடிவிட்டார். சிறிது நேரம் கழித்து வந்த யேசுதாஸ் ராஜாவின் குரலில் அந்த பாடலை கேட்டு மெய் சிலிர்த்து போய்விட்டாராம்.
‘நீங்கள் பாடியதை விட சிறப்பாக இந்த பாடலை என்னால் பாடமுடியாது. உங்கள் குரலிலேயே இந்த பாடல் படத்தில் இருக்கட்டும்’ என சொல்லி அப்பாடலை பாட மறுத்துவிட்டார். அப்படி உருவான பாடல்தான் தாய் முகாம்பிகை படத்தில் இசைஞானி பாடிய ‘ஜனனி ஜனனி ஜகம் நீ’ பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இளையராஜா செய்த வேலையில் கண்ணீர் விட்டு கதறிய பாரதிராஜா!.. அட அந்த படமா?!…