எல்லாருக்கும் சவால் விடும் படம்!..கமல் நினைச்சா கூட மீண்டும் நடிக்க முடியாது!..சொடக்கு போட்டு சொல்லும் பிரபலம்!..
உலக நாயகன் ஆண்டவர் என ரசிகர்களால் அன்பால் அழைக்கப்படும் நடிகர் கமல் விக்ரம் படத்திற்கு பிறகு டிரெண்டிங்கான நட்சத்திரமாக மாறிவிட்டார். அந்த அளவுக்கு கமல் நடிப்பில் இப்படி ஒரு படமா என வாயடைக்க வைத்து விட்டது. ஒரு பக்கம் லோகேஷ் காரணமாக இருந்தாலும் கமலும் தன்னுடைய ஸ்டைலிஷான நடிப்பால் நான் மீண்டும் வந்திருக்கிறேன் என சொல்லாமல் சொல்லி காட்டிவிட்டார்.
விக்ரம் படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி கமல் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் குழந்தையிலேயே நடிக்க வந்த கமல் ஆரம்பத்தில் இருந்தே கேமரா முன் தோன்றி தோன்றி சினிமா பற்றியை விஷயங்களை அங்குலம் அங்குலமாக தெரிந்து வைத்திருக்க கூடியவர்.
சினிமாவை பற்றி என்ன கேட்டாலும் இவரிடம் இல்லாத பதில்களே இருக்காது. இவருடன் ஆரம்பத்தில் இருந்து பயணம் செய்தவரும் நடிகரும் நெருங்கிய நண்பருமான ஒய்.ஜி.மகேந்திரன் கமலை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். அவர் கூறியதாவது:
இப்ப இருக்கிற கமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறார். எங்கள் காலத்தில் முழுவதும் ஜாலியாக கிண்டலும் கேலியுமாக கலாய்த்துக் கொண்டிருக்கும் கமலாகத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது மிகவும் சீரியஸாக இருக்கிறார். மேலும் நாங்கள் இருவரும் தொலைபேசியில் பேசும் பொழுதெல்லாம் அவர் நடித்த ‘சலங்கை ஒலி’ படத்தை பற்றி தான் அதிகமாக பேசுவோம்.அந்த படத்தை யார் எடுத்தாலும் இனி யாரும் நடிக்கவே முடியாது. ஏன் கமல் கூட அந்த மாதிரி இனி நடிக்க முடியாது என சவால் விட்டு கூறினார் ஒய்.ஜி.