தமிழில் உள்ள திரைப்பிரபலங்களில் எந்த காலத்திலும் மிகவும் மரியாதைக்குரிய ஒரு நடிகராக இருப்பவர் எம்ஜிஆர். அப்போதைய காலகட்டத்தில் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தவர் எம்.ஜி.ஆர், அதையும் தாண்டி சினிமாவிற்கு வெளியேவும் மக்களுக்கு பல நன்மைகளை செய்து பிரபலமானவராக எம்.ஜி.ஆர் இருந்தார்.
இதனால் பொதுவாக அனைத்து நடிகர்களுமே எம்.ஜி.ஆரிடம் மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்வது உண்டு. அது மட்டும் இன்றி மரியாதை குறைவாக நடந்து கொள்பவர்களிடம் எம்.ஜி.ஆர் அவ்வளவாக பழகுவதில்லை என ஒரு பேச்சு இருந்தது. சந்திரபாபு எம்.ஆர் ராதா போன்ற நடிகர்கள் எம்.ஜி.ஆரிடம் மரியாதை குறைவாக பழகுவதால் அவர்களிடம் அவர் இடைவெளியை கடைப்பிடித்தார் என அப்போதைய பிரபலங்கள் கூறுவதுண்டு.
எனவே எம்.ஜி.ஆரிடம் மனக்கசப்பு ஏற்படாமல் பழக வேண்டும் என்பதில் எல்லோரும் எப்போதும் சரியாக இருப்பார்கள். திரைப்பிரபலங்கள் அனைவருமே அப்போது நாடகம் வழியாக சினிமாவிற்கு வந்தவர்கள் என்பதால் அவர்கள் நாடகத்திற்கு அடிக்கடி செல்வதுண்டு.
நாடகத்தில் நடந்த சம்பவம்:
அப்படியாக நலம்தானா என்கிற நாடகத்தை பார்க்க சென்றிருந்தார் எம்.ஜி.ஆர். அப்போது அந்த நாடகத்தில் நகைச்சுவை செய்யும் சிறுவனாக ஒய்.ஜி மகேந்திரன் நடித்திருந்தார். அப்போது நாடகத்தில் ஒரு காட்சியில் ஒய்.ஜி மகேந்திரன் “இப்பலாம் என்னன்ன சினிமா படம் எடுக்குறாங்க. காத்து வாங்க போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்னு பாட்டு இருக்கு. கா
த்து வாங்க போனவன் காத்த மட்டும் வாங்கிட்டு வர வேண்டியதுதான” என கூறியுள்ளார்.
அதை கேட்டதும் நாடக குழுவே அதிர்ச்சியடைந்துள்ளது. ஏனெனில் எம்.ஜி.ஆர் படத்தில் வரும் பாடலைதான் ஒய்.ஜி கிண்டல் செய்தார். எம்.ஜி.ஆர் வேறு கீழே அமர்ந்து நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு நாடகம் முடிந்ததும் நாடக குழுவை சந்தித்த எம்.ஜி.ஆர், உங்கள் நாடகத்தில் நகைச்சுவை எல்லாம் நன்றாக உள்ளது என பாராட்டிவிட்டு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: பெரிய நடிகரின் பட வாய்ப்பை இழக்கவிருக்கும் ஹெச்.வினோத் – எல்லாத்துக்கும் கமல்தான் காரணமாம்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…