Cinema History
ஒரு மகனாக நின்று கடமையை செய்த சிவாஜி..காலத்திற்கும் நன்றி கடன் பட்ட நபர்..
சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர், நடிப்பு பல்கலைக்கழகம் என்றும் போற்றப்படுகிறார். சரித்திரம், புராணம் , குடும்பம், சமூகம் போன்ற அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று அதில் திறம்பட நடித்தவர் சிவாஜி கணேசன்.
ஒய். ஜி. மகேந்திரன் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட, நாடக நடிகர், எழுத்தாளர் ஆவார். தன்னுடைய நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரின் தந்தையார் தமிழ் மேடை நாடக முன்னோடிகளில் ஒருவரான ஒய்.ஜி. பார்த்தசாரதி ஆவார். இவர் மிகப்பெரிய சிவாஜியின் ரசிகர் ஆவார்.
நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் சிவாஜியின் மீது உயிரையே வைத்திருப்பவர் சிவாஜி உருவம் பதித்த டாலரை, சிவாஜி பரிசாக அளித்த தங்கச் சங்கிலியை தான் அணிந்திருப்பார். அவ்வளவு அன்பு கொண்டிருப்பவர். 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி இரவு மகேந்திரன் அப்பா ஒய்.ஜி.பி காலமானார். அன்று நாடகம் நடத்துவதற்காக ஒய்.ஜி மகேந்திரன் தனது குழுவினருடன் தூத்துக்குடிக்கு சென்றிருந்தார். மறுநாள் மே 1ம் தேதி சிவாஜியின் திருமண நாள் அன்று அவர் வீட்டில் ஹோமச் சடங்கில் ஈடுபட்டிருந்தார்.
அப்பொழுது அவருக்கு ஒய்.ஜி.பி மறைந்த தகவல் தெரியவந்தது உடனே ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஹோமத்திலிருந்து எழுந்து தனது துணைவியாருடன் ஒய்.ஜிபி வீட்டிற்கு சென்றார். அன்று ஒய் ஜி மகேந்திரன் தூத்துக்குடிக்கு சென்றுள விஷயத்தை அறிந்த சிவாஜி” மகேந்திரன் வர வரைக்கும் நானே எல்லாம் பார்த்துக் கொள்கிறேன் நீங்க ஆக வேண்டிய வேலையை பாருங்க ”என்றார். அந்த அளவுக்கு சிவாஜி ஒய்.ஜி.பி குடும்பத்தின் மீது மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார்.