More
Categories: Cinema News latest news

ஆடியோ லாஞ்சுக்கு ஏன் வரது இல்ல!.. யோகி பாபு சொன்ன அடடே விளக்கம்!.. மத்தவங்களாம் நடிக்கலையா?..

அஜித் குமார், நயன்தாரா வரிசையில் பட புரமோஷன்களையும் ஆடியோ லாஞ்ச்களில் பங்கேற்பதையும் யோகி பாபு தவிர்த்து வருவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற ஸ்கூல் படத்தின் பூஜையின் போது பத்திரிகையாளர்கள் மடக்கி கேள்வி கேட்க அடடே விளக்கம் ஒன்றை கூறி தலை தெறிக்க ஓடிவிட்டார் யோகி பாபு.

நாளை வெளியாகும் தூக்குத்துரை படத்தில் நான் ஹீரோயி இல்லை என்றும் மகேஷ் தான் ஹீரோ. நான் வெறும் 6 நாள் தான் நடிச்சேன் என உண்மையை உடைத்து பேசியுள்ளார் யோகி பாபு. தூக்குதுரை படத்தின் புரமோஷன் முழுவதுமே யோகி பாபு தான் ஹீரோ போல வைத்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

இதையும் படிங்க: தமிழ்நாட்டு டெஸ்லா அழகி!.. 48 மணி நேரம் படுத்தே இருப்பேன்.. ப்ளூ ஸ்டார் படத்துல என்ன பண்ணிருக்காரோ!

ஸ்கூல் படத்தில் ஸ்டூடன்ட்டாக பண்ணவில்லை என்றும் வாத்தியாராக நடிக்கிறேன். இந்த படத்தில் கே.ஏஸ். ரவிக்குமார், பூமிகா மேடம் எல்லாம் நடிக்கிறாங்க என கூறிய யோகி பாபு சாப்பிடுற சாப்பாட்டுக்கு ஏற்ற அளவுக்கு யோசித்து கேள்வி கேட்கணும் என பத்திரிகையாளரை கலாய்த்து பேசினார்.

ஆடியோ லாஞ்ச் விழாக்களுக்கு வந்து பட புரமோஷனை ஏன் செய்யவில்லை என்கிற கேள்வியை எழுப்பியதும் டே, நைட் என நடித்து வருகிறேன். எந்த படத்துக்கு நான் வரலைன்னு சொல்றாங்களோ அந்த படத்தின் இயக்குநரை அழைத்து கேள்வி கேளுங்க, என்னோட சிச்சுவேஷன் அவங்களுக்குப் புரியும் என பேசி விட்டு நகர்ந்து சென்றார்.

இதையும் படிங்க:  படம் கன்ஃபார்ம் ஹிட்டு!.. செம ஸ்டைலா கெத்தா மாறிட்டாரே சிம்பு!.. வைரல் போட்டோ!..

சிவகார்த்திகேயன், ஆர்ஜே பாலாஜி, ரஜினிகாந்த், விஜய் எல்லாமே தங்கள் பட புரமோஷனுக்கும் ஆடியோ லாஞ்சுக்கும் வரும் நிலையில், யோகி பாபுவால் வர முடியாதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Published by
Saranya M

Recent Posts