யோகி பாபுவ ஏன் தூக்குனீங்க? யோகியவிட புகழ் முக்கியமா? வலிமையால் கதறும் ரசிகர்கள்...!

இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் டாப்பில் இருக்கும் காமெடி நடிகர் என்றால் அது யோகி பாபு தான். தனது உருவம் மற்றும் அழகு என தன்னைத்தானே கேலி செய்து மற்றவர்களை சிரிக்க வைக்கும் ஒரு எளிமையான மனிதர் தான் யோகி பாபு. தனது திறமையால் தற்போது டாப் நடிகராக உருவாகி இருக்கும் யோகி தான் தற்போது அனைத்து டாப் நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வரிசையில் தான் அஜித் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான வலிமை படத்திலும் யோகி பாபு நடித்திருப்பதாக அவரே அறிவித்திருந்தார். ஆனால் படத்தில் யோகி பாபு ஒரு காட்சியில் கூட இல்லை. இதை கண்ட ரசிகர்கள் எங்கே தலைவன் யோகி பாபுவை காணோம் என கூச்சலிட ஆரம்பித்து விட்டார்கள்.

yogi babu
இந்நிலையில் தான் படத்தின் நீளம் காரணமாக யோகி பாபு நடித்த காட்சிகள் நீக்கப்பட்டிருப்பாக கூறப்பட்டது. ஆனால் தற்போது படக்குழுவினர் வேண்டுமென்றே யோகி பாபுவின் காட்சியை நீக்கி விட்டதாக புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.
அதன்படி யோகி பாபுவின் சம்பளம் மற்றும் கால்ஷீட் பிரச்சனை காரணமாகவே படக்குழுவினர் இவ்வாறு செய்திருப்பதாக பலர் சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் இதில் மற்றொரு பிரச்சனை என்னவென்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் கூட வலிமை படத்தில் ஐந்து நிமிட காட்சி ஒன்றில் தோன்றியுள்ளார்.

pugazh with ajith
இதனால் யோகி பாபுவை விடப் புகழ் முக்கியமா? என பலர் கோபத்தில் கமெண்ட் போட்டு வருகிறார்கள். யோகி பாபு காமெடி நடிகராக இருந்தாலும் அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதற்கு படக்குழு தரப்பில் இருந்து என்ன விளக்கம் அளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.