செஞ்ச பாவத்திற்கு பரிகாரம் தேடும் H.வினோத்.! அந்த மனிதர் ஏற்றுக்கொள்வாரா.?!

by Manikandan |
செஞ்ச பாவத்திற்கு பரிகாரம் தேடும் H.வினோத்.! அந்த மனிதர் ஏற்றுக்கொள்வாரா.?!
X

இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் வலிமை. அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இப்படத்தில் முதல் பாதியில் ஆக்ஷன் காட்சிகள் நன்றாக இருந்ததாகவும், இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் காட்சிகள் அதிகமாக இருந்ததால் படத்தின் நீளம், ரசிகர்களை சோர்வடைய செய்ததாக கூறப்பட்டது.

இதன் காரணமாக இரண்டாம் பாதியில் இருந்து சுமார் 15 நிமிடத்தை ரிலீசுக்கு பிறகு படக்குழு நீக்கி விட்டது. வலிமை திரைப்படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு நடித்து இருந்தார். ஆனால், படத்தில் அவரது காட்சிகள் ரிலீசுக்கு முன்பே நீக்கப்பட்டு விட்டதாம்.

இதையும் படியுங்களேன் - மன்மதலீலைகளால் பறிபோகும் வாய்ப்புகள்.! அக்கட தேசத்தில் தஞ்சமடைந்த வெங்கட் பிரபு.!

தனது கதாபாத்திரம் படத்தில் இடம்பெறும் என எதிர்பார்த்திருந்த யோகிபாபுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. இதனை சரிகட்டும் வகையில் வினோத், தான் அடுத்து இயக்கும் படத்தில் யோகிபாபுவுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்துள்ளாராம்.

அடுத்து அஜித்தின் 61 வது படத்தை இயக்கி முடித்து விட்டு, வினோத், விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் இயக்கபோவதாக கூறப்படுகிறது. அந்த படத்தில் யோகிபாபுவுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட உள்ளதாம். அதற்கு முன்னரே அஜித்தின் 61வது திரைப்படத்திலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

வலிமை படத்தில் யோகி பாபுவின் காட்சியை நீக்கியதற்கு வினோத் தொடர்ந்து 2 முறை அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Next Story